தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது பற்றி...

News image

சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் விஜய் - X

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, சட்டப்பேரவையில் தொடங்கியது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.

இதையடுத்து தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியுள்ளது. தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் பேசி வருகின்றனர்.

பெரும்பான்மையை நிரூபிக்க 50 சதவீதம் + 1 வாக்குகள் தேவை. அதன்படி, 232 எம்எல்ஏக்களில் 116 வாக்குகள் இருந்தால் தவெக அரசு வெற்றி பெறும்.

ஏற்கெனவே தவெக 120 எம்எல்ஏக்கள் ஆதரவு வரை வைத்திருக்கும் நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்த சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளதால் பெரும்பான்மைக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக முதல்வர் விஜய், தவெக எம்எல்ஏக்கள், திமுக மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர்.

Summary

Floor test on TVK govt starts in tn assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.