கோவை மாவட்டம், கணியூர் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ‘பசுமை வாக்குச்சாவடி’கள் அமைக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்ட நிகழ்வு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவை மாவட்டம், கணியூர் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையம் எண் 70, 73 மற்றும் 74 ஆகிய இடங்களில் இந்த முன்மாதிரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், கணியூர் ஊராட்சி நிர்வாகம் இந்த பசுமை வாக்குச்சாவடிகளைச் சிறப்பாக அமைத்திருந்தது.

கணியூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகள் - டிஎன்எஸ்
வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு பூச்செடிகள், பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், ஊராட்சி செயலர் ஜெகதீசன், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், தேர்தல் மண்டல அலுவலர் வாசுதேவன், 'பசுமை வனம்' அமைப்பின் பாலுசாமி, கவிதா ரஞ்சித் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டு வாக்காளர்களுக்குச் செடிகளை வழங்கினர்.வாக்களிப்பது ஜனநாயகக் கடமை, மரம் வளர்ப்பது இயற்கைக் கடமை என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்த முயற்சிக்கு, அப்பகுதி வாக்காளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
Summary
Regarding the distribution of saplings to voters during the Legislative Assembly election polling in Kaniyoor Panchayat, aimed at emphasizing environmental protection...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 27 வடமாநிலத் தொழிலாளா்கள் மீட்பு

தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உளவுத்துறை எச்சரிக்கை!

100 சதவீத வாக்குப்பதிவு குறித்து தேங்காய்ப் பருப்பில் விழிப்புணா்வு

மாப்பிள்ளை பொண்ணு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


