தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே, தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக வந்தாலும்கூட, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி ஆட்சியமைப்பதில் தவெக மும்முரம் காட்டி வருகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் இல்லாத நிலையில், திமுக அல்லது அதிமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார் தவெக தலைவர் விஜய்.
1967, 1977-இல் திமுக மற்றும் அதிமுகவுக்கு ஏற்பட்ட நிலை, தற்போது நடிகர் விஜய் தலைமையிலான தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக என எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் தமிழ்நாடு முதல்முறையாக தொங்கு பேரவையைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஆட்சி அமைக்க உரிமைகோரி தவெக தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகருக்குக் கடிதம் அனுப்பி, அவரது அழைப்பின்பேரில் புதன்கிழமை விஜய் சந்தித்தபோது, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்படி ஆளுநர் அவரிடம் தெளிவுபடுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் விஜய் முதல்வராக பொறுப்பேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கம்யூனிஸ்டுகள், விசிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களது ஆதரவு கிடைக்காத நிலையில் விஜய் முதல்வராக பொறுப்பேற்க முடியாக சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே, தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக காவல் துறைக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் இன்னும் ஆட்சி அமைக்காத நிலையில், . சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
Summary
Central Intelligence Agency Issues Warning to Heighten Security at Key Locations in Tamil Nadu...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பரபரப்பில் அரசியல் களம்! முக்கிய கட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்கள்!

இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: தவெக கோரிக்கை

தவெக தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


