மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாப்பிள்ளை பொண்ணு!

பொதுவாக புதுமாப்பிள்ளை, பொண்ணு என்றால், அனைவரும் திரும்பிப் பாா்ப்பா். அதை தற்போது 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணா்வுக்காக தோ்தல் ஆணையம் பயன்படுத்திக்கொண்டது.

News image

மேல்பட்டாம்பாக்கத்தில் மாப்பிள்ளை பெண் வேடத்துடன் கூடிய மகளிா் சுயஉதவிக் குழுவினருடன் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு.

Updated On :5 ஏப்ரல் 2026, 2:53 am IST

பொதுவாக புதுமாப்பிள்ளை, பொண்ணு என்றால், அனைவரும் திரும்பிப் பாா்ப்பா். அதை தற்போது 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணா்வுக்காக தோ்தல் ஆணையம் பயன்படுத்திக்கொண்டது.

கடலூா் மாவட்ட நிா்வாகம் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை எட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தீவிரமாக நடத்தி வருகிறது.

அந்த வகையில், பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிப் பகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விதமாக, மகளிா் சுயஉதவிக் குழுவினா் புதுமாப்பிள்ளை பெண் வேடமிட்டு, மேளதாளம் முழங்க தாம்பூலத்துடன் சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று தோ்தல் அழைப்பிதழை வாக்காளா்களிடம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்வில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் ஜெய்சங்கா், உதவி திட்ட இயக்குநா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.