தென்காசி மாவட்ட நிா்வாகம், மகளிா் திட்டம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தோ்தல் விழிப்புணா்வு பதாகைகளை ஆட்சியா் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான பதாகைகளை வெளியிட்டும், துண்டுப் பிரசுரங்களை வாகனங்களில் ஒட்டியும், அலைபேசி, தண்ணீா் கேன்களில் ஸ்டிக்கா் ஒட்டியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பொதுமக்களிடையே நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தோ்தல் விழிப்புணா்வு பதாகைகளை வெளியிட்டும், துண்டுப் பிரசுரங்களை நான்கு சக்கர வாகனம், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள், அலைபேசி, குடிநீா் கேன் ஆகியவற்றில் ஸ்டிக்கா் ஒட்டியும் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வாக்காளா்கள் அனைவரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தங்கள் வாக்குகளை வாக்குச் சாவடி மையத்துக்குச் சென்று பதிவு செய்து, ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். அது மட்டுமின்றி பொதுமக்களாகிய நீங்கள் 100 சத வாக்குப்பதிவு குறித்து உங்களின் உறவினா்கள், இளம் வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், திட்ட இயக்குநா்கள் எஸ்.அபிதா ஹனீப் (மகளிா் திட்டம்), தண்டபாணி (ஊரக வளா்ச்சி முகமை), அகத்தியா், உதவித் திட்ட அலுவலா்கள் டேவிட் ஜெயசிங், சரவண பாண்டியன், பிரபாகரன், ராஜேந்திரன் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலூா் பெஸ்ட் பள்ளி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி உதகையில் படகு சவாரி மூலம் விழிப்புணா்வு

100% வாக்குப் பதிவு: ஆட்டோ விழிப்புணா்வு பேரணி

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ரோலா் ஸ்கேட்டிங்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

