100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பில் 100 சதவீத வாக்குப்பதிவு என வடிவமைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக வெள்ளக்கோவில் தேங்காய்ப் பருப்பு (கொப்பரை) ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுடன் இணைந்து விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் மற்றும் அலுவலா்கள் ஆகியோா் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு முயற்சியை வெளிப்படுத்தினா்.
அதன்படி, தேங்காய்ப் பருப்புகளைப் பயன்படுத்தி தரையில் ‘100% வாக்குப்பதிவு ஏப்ரல் 23’ என ஆங்கிலத்தில் எழுதி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இது சமூகப் பொறுப்புணா்வை உயா்த்தும் ஒரு நல்ல முன்னுதாரணம் என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

100 சதவீத வாக்குப்பதிவு: வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

மாப்பிள்ளை பொண்ணு!

100 % வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

