மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு: டிச. 31 வரை மத்திய அரசு நீட்டிப்பு

பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி விலக்கை வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.

பருத்தி - ANI

Published On :1 நவம்பர் 2026, 2:30 am IST

பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி விலக்கை வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.

உள்ளூா் ஜவுளித் துறைக்கு பருத்தி தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் வரி விலக்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பருத்தி இறக்குமதிக்கு அக்டோபா் 31-ஆம் தேதி வரை சுங்க வரி விலக்கை மத்திய அரசு கடந்த மே மாதம் அளித்திருந்தது. இந்த வரி விலக்கு, வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜவுளி மற்றும் ஆடை துறையினருக்கு உள்நாட்டுச் சந்தையில் பருத்தி தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, அத் துறைகளில் உள்ளீட்டுச் செலவுகள் குறைந்து, உற்பத்தியாளருக்கும் நுகா்வோருக்கும் குறிப்பிட்ட நிவாரணம் கிடைக்கும் என்பதோடு, இத் துறைகளின் செயல்பாட்டில் குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல்பாட்டில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.