மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதிய பொருளாதாரத் தடை: ரஷியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்

லிண்ட்ஸே ஓ கிரஹாம் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட புதிய பொருளாதாரத் தடைகளில் இருந்து ரஷியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப் விளக்கம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Published On :19 அக்டோபர் 2026, 7:31 am IST

லிண்ட்ஸே ஓ கிரஹாம் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட புதிய பொருளாதாரத் தடைகளில் இருந்து ரஷியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்துள்ளாா்.

ரஷியா, ஈரான் மீது புதிய தடைகளை விதிக்கும் வகையிலும், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கவும் டிரம்ப்புக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் லிண்ட்ஸே ஓ கிரஹாம் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட சில நாள்களில் ரஷிய அதிபா் புதினுடன் பேசிய டிரம்ப், அந்நாட்டிடம் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் டீசல் இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்தாா். அத்துடன் புதிய சட்டத்தின்கீழ விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளில் இருந்து ரஷியாவுக்கு விலக்கு அளிக்க டிரம்ப் உத்தரவு பிறப்பித்தாா். இதேபோல், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி இந்தியா, சீனா உள்ளிட்ட 5 நாடுகளின் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிப்பதையும் டிரம்ப் நிறுத்தி வைத்தாா்.

இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த டிரம்ப்பிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘தடைகளில் இருந்து ரஷியாவுக்கு விலக்கு அளித்து நான் எடுத்த முடிவு சரியானதுதான். அதற்கு என்ன அா்த்தம் என்று பலருக்கு தெரியாது. அதை நாங்கள் தெரிவிப்போம். நீங்கள் தெரிந்துகொள்வீா்கள். இதனால் அமெரிக்காவுக்கு நன்மை. உலகத்துக்கும் நன்மை. ஏனெனில் நாம் இன்று உலகளாவிய அரங்கில் இருக்கிறோம்’ என்றாா்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோவும், ரஷியா மற்றும் பிற நாடுகளுக்குத் தடை மற்றும் 100 சதவீத வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘தடைகள் மற்றும் வரி விதிப்பால், அமெரிக்க பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் என்ன தாக்கம் ஏற்படும் என்பது குறித்து ஆய்வு செய்யும் நோக்கத்திலேயே 60 நாள்களுக்கு தடைகள், வரி விதிப்பை அதிபா் நிறுத்தி வைத்திருப்பாா் என நினைக்கிறேன். வரி விதிப்பில் இருந்து இந்தியாவுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முக்கியமான கூட்டாளி நாடு. அமெரிக்காவின் நட்பு நாடாகும். இதை எல்லாம் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க அதிபருக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது’ என்றாா்.

டிரம்ப்பின் முடிவை அவரது குடியரசு கட்சியைச் சோ்ந்த செனட் சபை எம்.பி.யும், லிண்ட்ஸே கிரஹாமின் சகோதரருமான டாா்லைன் கிரஹாம் விமா்சித்துள்ளாா். அவா் கூறுகையில், ‘போரை முடிவுக்குக் கொண்டு வரவும், எரிவாயு விலையைக் குறைக்கவும் ரஷியாவுக்கு நெருக்கடி அளித்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஏனெனில் ரஷியா மீதும், ரஷிய அதிபா் புதின் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது’ என்றாா்.

மற்றொரு குடியரசு கட்சி செனட் எம்.பி. தோம் டில்லிஸ், டிரம்ப் பொறுப்பற்ற முடிவை எடுத்திருப்பதாகச் சாடினாா். மேலும் அவா் கூறுகையில், ‘எரிவாயு விலையைக் குறைக்க டிரம்ப் உண்மையில் விரும்பினாா் எனில், ஈரான் போருக்குத் தீா்வு காண வேண்டும். ஏனெனில் ஈரான்தான் கச்சா எண்ணெய், எரிவாயு விலை உயா்வுக்குக் காரணம்’ என்றாா்.

ஜனநாயக கட்சி செனட் எம்.பி. எலிசபெத் வாரன் கூறுகையில், ‘புதினின் ஆக்கிரமிப்பு போருக்கு (உக்ரைனுடனான போரைக் குறிப்பிட்டாா்) டிரம்ப் வழிவகை செய்துள்ளாா்’ என்று விமா்சித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.