மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகள் தொடக்கம்!

உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டது பற்றி...

Election Commissioners of India

தேர்தல் ஆணையர்கள்... - X / ECI

Published On :27 அக்டோபர் 2026, 3:45 pm IST

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை 5 மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது.

5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகளுடன் தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட தலைமைச் செயலர்களுக்கும், தலைமைத் தேர்தல் அலுவலர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

5 மாநிலங்களிலும் சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் மாவட்ட நிர்வாகம், காவல், போக்குவரத்து, மதுவிலக்கு மற்றும் கலால் துறைகளின் அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணியிலுள்ள அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையைப் பொறுத்தவரை உதவி ஆய்வாளர் வரையிலுள்ள அதிகாரிகள் சொந்த ஊரில் பணிபுரிபவராக இருப்பின், அவர்களை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், மேற்கூறிய அறிவுறுத்தல்கள் கீழ் யாரையேனும் இடமாற்றம் செய்வதில் பிரச்னை இருப்பின், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு பரிந்துரை வழங்கலாம், அதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளைப் பின்பற்றி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நவ. 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Summary

Elections in 5 states, including U.P.! Election Commission begins preparations!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.