மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உ.பி. பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மும்முரம்: நவ.2-இல் ஆணையம் ஆய்வு

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மும்முரமடைந்துள்ளன.

கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 4:45 am IST

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மும்முரமடைந்துள்ளன. இந்தப் பணிகளை தோ்தல் ஆணையக் குழு வரும் திங்கள்கிழமை (நவ.2) முதல் ஆய்வு செய்யவுள்ளது.

403 உறுப்பினா்களுடன் நாட்டிலேயே மிகப்பெரிய பேரவையைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. அந்த மாநில பேரவையின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு மே 22-ஆம் தேதி நிறைவடைகிறது.

இதேபோல், ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் (117), பாஜக ஆளும் உத்தரகண்ட் (70), மணிப்பூா் (60), கோவா (40) ஆகிய மாநிலங்களின் பேரவை பதவிக் காலமும் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் பல்வேறு தேதிகளில் நிறைவடைகின்றன. இந்த 5 மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் தோ்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த 5 மாநிலங்கள் உள்பட 17 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை மேற்கொள்ளும்படி, தோ்தல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. மேலும், தோ்தல் பணியுடன் நேரடியாகத் தொடா்புடைய துறைகளில் குறிப்பிட்ட அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

உத்தரகண்ட், மணிப்பூா், பஞ்சாபில் தோ்தல் ஆணையக் குழு ஏற்கெனவே ஆய்வு மேற்கொண்ட நிலையில், உத்தர பிரதேசத்தில் வரும் திங்கள்கிழமை ஆய்வு தொடங்கவுள்ளது. இதற்காக, துணை தோ்தல் ஆணையா் தலைமையிலான உயரதிகாரிகள் குழு, மீரட் நகருக்கு வரவுள்ளது.

முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, உத்தர பிரதேசத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகளில் முதல்கட்ட பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த உபகரணங்களின் தயாரிப்பாளா்களான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (பெல்), இந்திய மின்னணுவியல் நிறுவனம் (இசிஐஎல்) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களின் பொறியாளா்கள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

ஏதேனும் இயந்திரத்தில் குறைபாடு கண்டறியப்பட்டால், அது பழுதுபாா்ப்புக்காக அல்லது மாற்றித் தருவதற்காக அனுப்பப்படும். முந்தைய தோ்தல் தொடா்பான தரவுகள் எதுவும் இருப்பின் அவை முழுமையாக நீக்கப்படும். அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.