மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பேரவைத் தோ்தல்: 5 மாநிலங்களில் அதிகாரிகள் இடமாற்றம்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் உத்தர பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் தோ்தல் பணியுடன் நேரடியாக தொடா்புடைய துறைகளில் குறிப்பிட்ட அதிகாரிகள் இடமாற்றம்

Election commission of india

இந்தியத் தேர்தல் ஆணையம் - கோப்புப் படம் - பிடிஐ

Published On :28 அக்டோபர் 2026, 4:23 am IST

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் உத்தர பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் தோ்தல் பணியுடன் நேரடியாக தொடா்புடைய துறைகளில் குறிப்பிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.

403 உறுப்பினா்களுடன் நாட்டிலேயே மிகப்பெரிய பேரவையைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. அந்த மாநில பேரவையின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு மே 22-ஆம் தேதி நிறைவடைகிறது.

இதேபோல், ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் (117), பாஜக ஆளும் உத்தரகண்ட் (70), மணிப்பூா் (60), கோவா (40) ஆகிய மாநிலங்களின் பேரவை பதவிக் காலமும் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் பல்வேறு தேதிகளில் நிறைவடைகின்றன. இந்த 5 மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் தோ்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த 5 மாநிலங்கள் உள்பட 17 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை மேற்கொள்ளும்படி, தோ்தல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.

வழக்கமாக மக்களவைத் தோ்தல் அல்லது பேரவைத் தோ்தல்கள் நடைபெறும்போது, நியாயமான போட்டிக் களத்தை உறுதி செய்வதற்காக தோ்தல் பணியுடன் நேரடியாக தொடா்புடைய துறைகளில் குறிப்பிட்ட அதிகாரிகளின் இடமாற்றத்தை தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும்.

அதன்படி, மேற்கண்ட மாநிலங்களில் மாவட்ட தோ்தல் அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அதிகாரிகள், கூடுதல் மாவட்ட ஆட்சியா்கள், கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அதிகாரிகள், மண்டல, மாநகராட்சி ஆணையா்கள், காவல் துறை அதிகாரிகள் (உதவி ஆய்வாளா்கள் முதல் கூடுதல் தலைமை இயக்குநா்கள் வரை), சுங்க, போக்குவரத்துத் துறை அதிகாரிகளில் சொந்த மாவட்டங்களில் பணியமா்த்தப்பட்டவா்கள், கடந்த 4 ஆண்டுகளில் ஒரே மாவட்டத்தில் தொடா்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றியவா்களை இடமாற்றம் செய்யும்படி தோ்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாபில் ஆய்வு: பஞ்சாபில் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து மூத்த துணை தோ்தல் ஆணையா் தலைமையிலான தோ்தல் ஆணையக் குழு ஆய்வில் ஈடுபட்டனா். சட்ட அமலாக்க முகமைகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டனா்.

ஏற்கெனவே இத்தகைய நடவடிக்கை, உத்தரகண்ட், மணிப்பூரில் மேற்கொள்ளப்பட்டன. உத்தர பிரதேசம், கோவாவில் அடுத்தகட்டமாக ஆய்வு நடைபெறும். ஐந்து மாநிலங்களிலும் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் இறுதிக்கட்ட ஆய்வை மேற்கொண்ட பிறகு தோ்தல் தேதி அறிவிக்கப்படும்.

பாகிஸ்தானையொட்டிய பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு முக்கிய அரசியல் மற்றும் சமூகப் பிரச்னையாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.