நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ஏஐ தாக்கம்! 60,000 ஊழியர்களை தாமாக விலக மைக்ரோசாஃப்ட் அறிவுறுத்தல்!

60,000 ஊழியர்களை தாமாக விலக மைக்ரோசாஃப்ட் அறிவுறுத்தியிருப்பது பற்றி...

microsoft

மைக்ரோசாஃப்ட் - கோப்புப்படம்

Published On :27 அக்டோபர் 2026, 10:35 am IST

செய்யறிவு தாக்கம் காரணமாக தகுதியுள்ள 60,000 ஊழியர்களை தாமாக முன்வந்து வேலையைவிட்டு விலகுவதற்கான வாய்ப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.

உலகளவிலுள்ள முன்னணி நிறுவனங்கள் செய்யறிவு செலவினங்களை அதிகரித்து வரும் வேளையில், பிற செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கி தொடக்க நிலை மற்றும் நடுநிலை தொழில்நுட்ப ஊழியர்களிடையே ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தொடங்கியிருக்கும் நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜூன் 2026 நிலவரப்படி, உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 2.23 லட்சம் பேர் முழுநேர ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த தகுதியுள்ள 60,000 ஊழியர்களுக்கு தாமாக முன்வந்து பணியிலிருந்து விலகிக் கொள்வதற்கான வாய்ப்பை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், தாமாக முன்வந்து நிறுவனத்திலிருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு பணிநீக்க இழப்பீடு உள்ளிட்ட சலுகைகளும், தொழில் மாற்றத்துக்கான உதவியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் முதல் வாரத்துக்குள் முடிவெடுக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வெளியேற விரும்பும் ஊழியர்கள் டிசம்பர் 31 அன்று விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தரவு மையங்கள், விற்பனை, மார்க்கெட்டிங், தரவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Summary

AI ​​impact! Microsoft advises 60,000 employees to resign voluntarily!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.