தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடி உயர்வு! நாளை முதல் அமல்!

ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக...

aavin

ஆவின் பொருள்கள் - கோப்புப்படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:29 pm IST

தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட 67 ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை (அக். 28) முதல் அமல்படுத்தப்படுகிறது.

ஆவின் நிறுவனம் 175-க்கும் மேற்பட்ட வகையான பால் மற்றும் பால் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் இவை விற்பனை செய்யப்படுகின்றன.

சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கேற்ப விநியோகிக்கப்படுகின்றன.

சாக்லேட், பால் ரஸ்க் ஆகியவற்றுக்கும் பொதுமக்களிடையே வரவேற்பு உள்ளது. தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட முக்கியப் பொருள்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மூலப்பொருள்களின் விலை உயர்வு, கொள்முதல் செலவுகள் மற்றும் இதர செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆவின் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Story image

தீபாவளி நெருங்கும் நிலையில், ஆவின் நெய், வெண்ணெய், இனிப்புப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

500 மி.லி. ஆவின் நெய் ரூ. 365-ல் இருந்து ரூ.400 ஆகவும் 500 மி.லி. தயிர் ரூ. 35-ல் இருந்து ரூ. 40 ஆகவும் 250 கிராம் ஆவின் மைசூர்பா ரூ.140-ல் இருந்து ரூ.160 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 250 கிராம் குலாப்ஜாமுன் ரூ. 115 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வெண்ணெய் முறுக்கு 200 கிராம் ரூ. 95, ஆவின் மிக்சர் 200 கிராம் ரூ. 110, மில்க் பேடா 100 கிராம் ரூ. 60, மோர் 100 மி.லி. 10 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மக்களின் அத்தியாவசிய பொருளான ஆவின் பாலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The prices of 67 Aavin dairy products—including curd, butter, and ghee—have been significantly increased. This price hike will come into effect starting tomorrow (Oct. 28).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.