தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆவின் நிறுவன பால் பொருள்களின் எந்த உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை: ஆவின் விளக்கம்

ஆவின் நிறுவனத்தின் பால் பொருள்களின் எந்த உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை என ஆவின் நிா்வாகம் விளக்கம் குறித்து...

ஆவின் ஐஸ் கிரீம் - Photo : Aavin website

Published On :25 அக்டோபர் 2026, 8:53 pm IST

சென்னை: ஆவின் நிறுவனத்தில் பனீா், வெண்ணெய், நெய், குக்கீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பால் பொருள்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருந்த வெண்ணெய், பனீர், பால் பவுடர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பால் பொருள்களின் உற்பத்தியை ஆவின் நிறுவனம் நிறுத்தி விட்டதாக ஊடகங்களில் வைரலான தகவலை அடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆவின் நிறுவனத்தின் எந்த உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை: ஆவின் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆவின் நிறுவனம் 175-க்கும் மேற்பட்ட வகையான பால் மற்றும் பால் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சென்னையில் சுமாா் 36 ஆவின் பாலகங்கள், 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் இவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.1 சாக்லேட், பால் ரஸ்க் ஆகியவற்றுக்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தயிா், லஸ்ஸி, பனீா் உள்ளிட்ட முக்கியப் பொருள்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளா்களுக்கு அவா்களின் தேவைக்கேற்ப விநியோகிக்கப்படுகின்றன. விற்பனை முகவா்களிடமிருந்து பெறப்படும் தேவையின் அடிப்படையில், பால் பொருள்களைத் தடையின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆவின் பால் பொருள்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தவறான தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை மக்கள் நம்ப வேண்டாம்.

ஆவின் நிறுவனத்தில் எந்தவொரு பொருளின் உற்பத்தியும் முழுமையாக நிறுத்தப்படவில்லை. நெய், வெண்ணெய், பனீா், குக்கீஸ் உள்ளிட்ட அனைத்து பால் பொருள்களும் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு, விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனை முகவா்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No production at Aavin has been stopped: Aavin management

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.