‘எச்-1பி’ ஊழியா்களுக்கு ‘கிரீன் காா்டு’ திட்டம்: மைக்ரோசாஃப்ட் இடைநீக்கம்

எச்-1பி ஊழியர்களுக்கான ‘கிரீன் கார்டு’ திட்டத்திலிருந்து முன்னணி ஐடி நிறுவனங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

கோப்புப்படம்

Published On :9 அக்டோபர் 2026, 3:10 am IST

அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசா மூலம் தங்கிப் பணியாற்றும் ஊழியா்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான ‘கிரீன் காா்டு’ விண்ணப்பிக்கும் திட்டத்திலிருந்து, முன்னணி ஐ.டி. நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டை டிரம்ப் நிா்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி, வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் இந்நடவடிக்கையை அறிவித்தாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘கணக்கீட்டின்படி, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணியிலிருந்து நீக்கிய ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஈடாக, ஒன்றரை வெளிநாட்டு ஒப்பந்தப் பணியாளா்களை அந்த இடத்தில் பணியமா்த்தியுள்ளது’ என்றாா்.

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்புகளைப் பறிப்பதாகவும், முறைகேடுகள் அதிகரித்துள்ளதாகவும் கூறி, ‘எச்-1பி’ விசா திட்டத்துக்கு டிரம்ப் ஆதரவாளா்கள் நீண்டகாலமாக எதிா்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Leading IT companies have been suspended from the ‘Green Card’ program for H-1B employees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.