மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மக்களின் நிலங்களைப் பறிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை: யோகி ஆதித்யநாத்

சட்டவிரோத நிலக் கைப்பற்றினால் கடும் நடவடிக்கை பற்றி..

CM Adityanath

யோகி ஆதித்யநாத் - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 2:42 pm IST

சட்டவிரோதமாக நிலங்களைக் கைப்பற்றுபவர்கள், மக்களின் நிலங்களைப் பறிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அதிகாரிகளிடம் அவர் பேசியதாவது,

மனிதக் குலத்திற்குச் செய்யும் சேவை இறைவனுக்குச் செய்யும் சேவை என்ற உணர்வுடன் அரசு மக்களுக்குச் சேவை செய்து வருகின்றது. மேலும், பொது நலனுக்காகவும், குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பாடுபடுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு மனுதாரரிடமும் கனிவுடனும் உணர்வுப்பூர்வமாகவும் நடந்துகொள்ள வேண்டும், அவர்களின் குறைகளைத் தாமதமின்றி, திருப்திகரமான முறையில் தீர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தன்னிடம் உதவி கோரி வந்தவர்களிடம், அவர்களின் சிக்கல்களைத் தீர்ப்பதே அரசின் முதன்மையான முன்னுரிமை.

நிலங்களைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றுபவர்கள், பலவீனமான மக்களை அவர்களின் இடங்களிலிருந்து வெளியேற்றுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை விட்டுவைக்கக் கூடாது. அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நிலம் மற்றும் சொத்து தொடர்பான குடும்பத் தகராறுகளில், சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து, பேச்சுவார்த்தை மூலம் சிக்கலைத் தீர்க்க முயற்சிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

வருவாய் மற்றும் காவல் துறை தொடர்பான புகார்களைக் கையாளும்போது, ​​முழுமையான வெளிப்படைத் தன்மையுடனும் பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும். யாருக்கும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.