தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நரிக்குறவ மக்களின் வலிகளைப் பேசும் சிங்காரம்: திரை விமர்சனம்

இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் நடிகர் யோகிபாபு நடித்துள்ள சிங்காரம் திரைப்படத்தின் விமர்சனக் கட்டுரை

சிங்காரம் திரைப்படத்தின் காட்சி

dinamani online

Published On :31 அக்டோபர் 2026, 6:40 pm IST

சிங்காரம்

2/5

சமூகத்தின் அனைத்து தரப்பினராலும் ஒடுக்கப்படும் நரிக்குறவர் இன மக்களிலிருந்து ஒருவர் கோடீஸ்வரனாகி தன்னுடைய மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பது எப்படி சாத்தியமானது என்பதே சிங்காரம் திரைப்படம்.

இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கே வி கதிர்வேலு இயக்கியுள்ளார். யோகி பாபு நாயகனாக நடித்துள்ளார். அவருடன் நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மாரிமுத்து, வேலராமமூர்த்தி, தீபா, சென்ராயன் என பலர் நடித்துள்ளனர். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

1990-களில் நடக்கும் இந்தக் கதைக் களத்தில் பஞ்சம் பிழைக்க நாடோடிகளாக வரும் எம். எஸ் பாஸ்கர் தலைமையிலான நரிக்குறவர் இனக் கூட்டத்தினர் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியை அடைகின்றனர். அவர்களுக்கு, ஊரின் களத்து மேட்டுப் பகுதியில் தங்கியிருந்து பஞ்சம் பிழைக்க அனுமதி அளிக்கிறார் ஊர் தலைவரான வேல ராமமூர்த்தி. எனினும் அவர்களை சாதிய பாகுபாட்டோடு நடத்துகின்றனர் உள்ளூர் அரசியல்வாதியின் தம்பியான சென்ராயனும் அவரது அடியாட்களும். இந்நிலையில் எம்.எஸ்.பாஸ்கர் வாங்கிய லாட்டரிக்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு விழ கோடீஸ்வரனாகிறார் சிங்காரம் எனும் யோகி பாபு. அதன் பின் என்ன ஆனது என்பதே சிங்காரம் திரைப்படத்தின் எஞ்சிய கதை.

சமூகத்தில் நரிக்குறவர் இன மக்கள் சந்திக்கும் அன்றாட இன்னல்களை காட்சியில் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கதிர்வேலு. மருத்துவமனையில் அனுமதி கிடைக்காதது, உணவிற்காக தவிப்பது, சாதிய பாகுபாட்டோடு அணுகுவது என நரிக்குறவர் இன மக்கள் அனுபவிக்கும் அன்றாட சிக்கல்களை திரையில் கடத்தி இருக்கிறார். முதல் பாதியில் அம்மக்களின் கொட்டகைகளும், ஊசி மணி பாசிமணிகளின் விற்பனை மூலம் அவர்களின் வறுமையை தெளிவாக காட்ட முடிந்திருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி யோகி பாபுவின் திடீர் கோடீஸ்வர மாற்றம், ஊருக்காக உழைப்பது, அரசியல் பிரவேசம் என வழக்கமான சினிமா தளங்களுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. நரிக்குறவர் இன மக்களின் இந்த வளர்ச்சி பேசப்பட வேண்டியது எனினும் திரை மொழியாக அதைக் கடத்த இயக்குநர் தவறி இருக்கிறார். முதல் பாதி முழுக்க பில்டப்களால் உருவாக்கப்பட்ட சென்ராயனின் வில்லத்தனம் இரண்டாம் பாதியில் எடுபடவில்லை. யோகி பாபுவின் இடை சேர்க்கப்பட்ட காதல் கதையும் கதைக்குள் எடுபடவில்லை.

நாயகனாக நடித்துள்ள யோகி பாபு தன்னுடைய வழக்கமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நடிகர் யோகி பாபுவின் நடிப்பு வழக்கமானதாக உள்ளது. இரண்டாம் பாதியில் சாதியால் ஒடுக்கப்படும் போது கூனிக் குறுகி நிற்கும் நரிக்குறவர் இன மக்களில் ஒருவனாக கவனிக்க வைக்கிறார். அவருடன் நடித்துள்ள வேல ராம மூர்த்தியின் கதாபாத்திரம் யதார்த்தமாக உள்ளது. இளவரசு, தீபா, மனோபாலா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

சாம் சி எஸ்-இன் பின்னணி இசை ஆறுதல். பிரசன்னாவின் ஒளிப்பதிவு கதையை நிலை நிறுத்துவதில் கை கொடுத்திருக்கிறது.

நரிக்குறவர் இன மக்கள் சமூகத்தில் அவமரியாதையுடன் நடத்தப்படுவது தொடர்பாக பொது சமூகத்தின் கவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள சிங்காரம் திரைப்படம் பாதிக் கிணறு தாண்டிய மண்டேலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.