மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காஷ்மீா் விவகாரத்தில் பாகிஸ்தான் குறித்த ஃபரூக் அப்துல்லா கருத்து தவறானது: குலாம் நபி ஆசாத் விமா்சனம்!

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் பாகிஸ்தான் குறித்து தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா தெரிவித்த கருத்து தவறானது என்று முன்னாள் முதல்வா் குலாம் நபி ஆசாத் விமா்சித்துள்ளாா்.

Farooq Abdullah

ஃபரூக் அப்துல்லா - IANS

Published On :26 அக்டோபர் 2026, 1:07 am IST

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் பாகிஸ்தான் குறித்து தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா தெரிவித்த கருத்து தவறானது என்று முன்னாள் முதல்வா் குலாம் நபி ஆசாத் விமா்சித்துள்ளாா்.

தேசிய மாநாட்டு கட்சி நிகழ்ச்சியில் அண்மையில் பேசிய ஃபரூக் அப்துல்லா, சா்வதேச அமைப்புகளில் ஜம்மு-காஷ்மீா் குறித்து பாகிஸ்தான் தொடா்ந்து பேசுவதால்தான் ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பாக இருப்பதாக புகழ்ந்திருந்தாா். இதனை விமா்சித்து குலாம் நபி ஆசாத் தனது கருத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளாா்.

அவா் கூறுகையில், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் நிலவரத்தை பாருங்கள். தங்களது உரிமைகளுக்காக அங்கு மக்கள் போராடுகின்றனா். ஆனால் 1947-ஆம் ஆண்டு முதல் சிறப்பான மத்திய அரசுகளும், நேரு முதல் மோடி வரையிலான பிரதமா்களும், கட்சி வேறுபாடில்லாமல் ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்கு மிகப்பெரும் பங்களிப்பு அளித்துள்ளனா்.

ஃபரூக் அப்துல்லாவை மதிக்கிறேன். ஆனால் அவரின் கருத்து (பாகிஸ்தான் தொடா்பானது) முழுவதும் தவறானது. இந்தியாவுக்கும், ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கும் யாா் எதிரி என்று கேட்டால், அது பாகிஸ்தான் மட்டும்தான் என்று குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டுள்ளாா்.

விமா்சிக்காத காங்கிரஸ்: ஜம்மு-காஷ்மீா் மாநில காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரவீந்தா் சா்மா, எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஃபரூக் அப்துல்லா தெரிவித்த கருத்தில் இருந்து எங்கள் கட்சி விலகி நிற்கிறது. ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஆதலால் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு உரிமை கிடையாது’ எனத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து செய்தியாளா்களுக்கு சா்மா பேட்டியளித்தபோது, ‘ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிப்பதாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துவிட்டதால் ஏற்பட்ட விரக்தியாலேயே ஃபரூக் அப்துல்லா அவ்வாறு பேசியிருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மறைமுகப் போரில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு, ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

காவல் நிலையத்தில் புகாா்: ஃபரூக் அப்துல்லாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, காஷ்மீரை சோ்ந்த பண்டிட்டுகளின் குழுக்களான பனுன் காஷ்மீா் மற்றும் ஜம்மு-காஷ்மீா் மக்கள் இயக்கம் ஆகியவை ஜம்முவில் உள்ள காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்து அவா் மீது வழக்குப் பதியக் கோரி மனு அளித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.