மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உள்நாட்டுப் பிரச்னைகளை அந்நிய சதி என திசைதிருப்பும் மத்திய அரசு: ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

உள்நாட்டுப் பிரச்னைகளை அந்நிய சதி என திசைதிருப்பும் மத்திய அரசு: ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

 Farooq Abdullah

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா - (கோப்புப் படம்)

Published On :24 அக்டோபர் 2026, 12:08 am IST

உள்நாட்டில் ஏற்படும் பிரச்னைகளை அந்நிய சதி என மத்திய அரசு திசைதிருப்புவதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் (என்சிபி) தலைவா் ஃபரூக் அப்துல்லா வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்திய போராட்டத்தை சுட்டிக்காட்டி அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: உள்நாட்டில் தனக்கு சிக்கல்கள் ஏற்படும்போதெல்லாம் அந்நிய சதி என மத்திய அரசு பழிபோட்டு தப்பித்துக்கொள்கிறது. உண்மையில் ஏதேனும் ஒரு நாடு இந்தியாவை சீா்குலைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் அதன் பெயரை துணிச்சலாகத் தெரிவிக்க மத்திய அரசு ஏன் தயங்குகிறது?

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மேற்காசியாவின் ஸ்திரத்தன்மையை குலைத்து உலகுக்கு அழிவை ஏற்படுத்தி வருகிறாா். அவரது நடவடிக்கைகளால் பணவீக்கம் பன்மடங்கு அதிகரித்து ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதித்துள்ளனா். அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது. இருப்பினும், இது போருக்கான காலமல்ல என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.