மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எஸ்.ஐ.ஆர். திருத்தம் மூலம் சாதித்தது என்ன? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி?

வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒரு மாபெரும் சதி காங்கிரஸ் குற்றச்சாட்டு பற்றி.

SIR a conspiracy

ஜெய்ராம் ரமேஷ் - எக்ஸ்

Published On :29 அக்டோபர் 2026, 1:09 pm IST

இந்திய மக்களில் மிகப்பெரிய பிரிவினரின் அரசியலமைப்பு ரீதியான வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பதை உறுதி செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரால் செயல்படுத்தப்பட்ட சதியே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,

எஸ்ஐஆர் பட்டியல் திருத்தம் ஆறு மாநிலங்களில் இதுவரை நிறைவடைந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வாக்காளர் பட்டியல்களைச் சரிசெய்வதற்காக ஊடுருவல்காரர்களைக் கண்டறிந்து நீக்கி, வெளியேற்றுவது என்ற முப்பரிமாண நோக்கத்தை எஸ்ஐஆர் கொண்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

எஸ்ஐஆர் உண்மையில் என்ன சாதித்துள்ளது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கர்நாடகம், ஜார்க்கண்ட், மேகாலயா, கேரளம், கோவா, மிசோரம் ஆகிய ஆறு மாநிலங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,600 வெளிநாட்டினர் மட்டுமே கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாநிலங்களில் 1,600 வெளிநாட்டினரைக் கண்டறிய, கிட்டத்தட்ட 10 கோடி மக்களிடம் எஸ்ஐஆர்-ஐ சரிபார்த்துள்ளனர். தேர்தல் ஆணையம் தரவுகளைச் சேகரிக்கக் கோராததால், மற்ற 20 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தரவுகளை வழங்கவில்லை.

கர்நாடகத்தில் 99.7 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், 716 வெளிநாட்டினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 545 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்.

எஸ்ஐஆர் என்பது பிரதமர், உள்துறை அமைச்சரின் கூட்டுச் சதி, தலைமைத் தேர்தல் ஆணையர் மூலம் பல்வேறு வழிகளில் இது செயல்படுத்தப்பட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் இடைநிறுத்தப்பட வேண்டும், தேர்தல் ஆணைய இணையதளச் சேவை சீரமைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை எதிர்க்கட்சி மீண்டும் வலியுறுத்தியது இவ்வாறு அவர் கூறினார்.

SIR a conspiracy designed by PM-HM, executed by CEC, to snatch right to vote: Cong

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.