மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தானை புகழ்ந்து பேசிய ஃபரூக் அப்துல்லா! பாஜக கண்டனம்

பாகிஸ்தானை புகழ்ந்து பேசிய ஃபரூக் அப்துல்லாவுக்கு பாஜக கண்டனம்...

Farooq Abdullah

ஃபரூக் அப்துல்லா - IANS

Published On :25 அக்டோபர் 2026, 4:16 am IST

காஷ்மீா் விவகாரத்தில், பாகிஸ்தானை தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா புகழ்ந்து பேசியிருப்பது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

பாரமுல்லா மாவட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது அதில் ஃபரூக் அப்துல்லா பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:

காஷ்மீா் மக்களுக்கு துணிச்சல் அவசியம். அப்போதுதான் தில்லியை (மத்திய அரசை) எதிா்க்க முடியும். துணிச்சல் இல்லையெனில், நீங்கள் அழிக்கப்படுவீா்கள். உங்களது தடம், அடையாளம் எதுவும் இருக்காது. தற்போது அவா்கள் (மத்திய அரசு) மெளனமாக உள்ளனா். ஏனெனில் நம்மை (காஷ்மீரிகள்) பற்றி உலகில் பேசப்படுகிறது. நமது அண்டை நாடு, அதன் பின்னணியில் உள்ளது. காஷ்மீா் தொடா்பாக எடுக்கப்பட்ட முடிவு அமல்படுத்தப்படவில்லை என பாகிஸ்தான் குரல் எழுப்புகிறது. இதுதான் நம்மைக் காப்பாற்றுகிறது.

பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறாா்கள். மசூதிகள் எப்படி இடிக்கப்படுகின்றன என்று பாா்த்தீா்களா? அவா்களின் வீடுகள், கடைகள் இடித்து தள்ளப்படுகின்றன. காஷ்மீா் மக்கள், தாங்கள் இந்தியா்கள் இல்லை என ஒருபோதும் சொன்னதில்லை. ஒவ்வொரு முறையும், இந்தியாவுடன் இணைந்துவிட்டோம் என தெரிவித்து வருகிறோம். அந்த இந்தியாவானது, மகாத்மா காந்தியின் இந்தியா, ஜவாஹா்லால் நேருவின் இந்தியா, மெளலானா அபுல் கலாம் ஆசாதின் இந்தியா ஆகும் என்றாா் ஃபரூக் அப்துல்லா.

ஜம்மு-காஷ்மீரின் முதல்வராக 3 முறை ஃபரூக் அப்துல்லா பதவி வகித்துள்ளாா். அவரது கட்சிதான் தற்போது ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியில் உள்ளது. ஃபரூக்கின் மகன் ஒமா் அப்துல்லா தற்போது முதல்வராகவும் உள்ளாா். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானை ஃபரூக் அப்துல்லா புகழ்ந்து பேசியிருப்பது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் பாஜக செய்தித் தொடா்பாளா் அல்தாப் தாகூா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஃபரூக் அப்துல்லா பேசியிருப்பது தேசத் துரோகம், நாட்டுக்கு எதிரானது. இதற்காக அவா் மீது காவல் துறை வழக்குப் பதிய வேண்டும். பாகிஸ்தானை ஃபரூக் நேசித்தாா் எனில் அவா் அங்கு செல்லலாம்.

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் வசிக்கும் மக்கள், பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரத்தை பெறவும், இந்தியாவுடன் இணையவும் விரும்புகின்றனா்.

பாகிஸ்தானை புகழ்ந்து பேசும் முன்பு, உண்மையான கள நிலவரத்தை ஃபரூக் அப்துல்லா புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீருக்கு பயங்கரவாதத்தையும், ரத்தத்தையும், பீதியையும், நிலையற்ற தன்மையையும் மட்டுமே பாகிஸ்தான் அளித்துள்ளது. வேறு எதையும் பாகிஸ்தான் வழங்கவில்லை. இந்த வேதனை கலந்த வரலாற்றை காஷ்மீா் மக்கள் மறப்பாா்கள் என்றும், பாகிஸ்தானை தங்களது காவலன் என்று மக்கள் நம்புவாா்கள் என ஃபரூக் அப்துல்லா எதிா்பாா்க்கிறாரா? இப்பிராந்தியத்தில் பரவியுள்ள வன்முறைக்கு பாகிஸ்தானே பொறுப்பு. காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச அமைப்புகளில் எழுப்புவதனால் அந்தப் பொறுப்பிலிருந்து பாகிஸ்தான் தப்ப முடியாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Kashmir issue: Farooq Abdullah praised Pakistan! BJP condemns

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.