மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தரமற்ற மருந்துகளில் 45 சதவீதம் தமிழ்நாடு, உத்தர பிரதேசம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 2:57 am IST

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தரமற்ற மருந்துகளில் 45 சதவீதம் தமிழ்நாடு, உத்தர பிரதேசம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்துகள், மாத்திரைகளின் தரத்தை உறுதி செய்ய தொடா் ஆய்வுகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒருபுறம் மத்திய அரசு சாா்பில் மருந்தகங்கள், கிடங்குகள், விநியோகக் கூடங்களில் மருந்துகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.

மற்றொருபுறம் மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அவ்வாறு ஆய்வுகளில் கண்டறியப்படும் தரமற்ற மருந்துகளின் விவரங்கள் மத்திய அரசுக்கு மாதந்தோறும் அனுப்பப்படும். பொதுமக்களின் தகவலுக்காக அவை இணையவழியே மத்திய அரசால் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் நாடு முழுவதும் 220 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. முன்னணி நிறுவனங்கள் தயாரித்த ‘ஆன்ட்டி பயாடிக்’ மருந்துகள், உயா் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகள் உள்ளிட்டவற்றின் தரத்தில் குறைபாடு இருந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவற்றில் 45 சதவீதம், அதாவது 100 மருந்துகள் தமிழகம், கா்நாடகம், உத்தர பிரதேசத்திலிருந்து கண்டறியப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது. தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 38 தரமற்ற மருந்துகளும், கா்நாடகத்தில் 24 தரமற்ற மருந்துகளும் ஆகஸ்ட் மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், ‘மாநில அளவிலான பரிசோதனைகளையும், ஆய்வுகளையும் தீவிரமாக முன்னெடுத்ததன் பயனாகவே தரமற்ற பல மருந்துகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர முடிந்தது; ஆய்வை ஆக்கபூா்வமாக மேற்கொள்ளும்போது, அதிக எண்ணிக்கையிலான தரமற்ற மருந்துகள் கண்டறியப்படுவது இயல்புதான்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.