மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி பகிா்வு: ரூ. 1.09 லட்சம் கோடி விடுவிப்பு

மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பகிா்வாக ரூ. 1.09 லட்சம் கோடியை மத்திய அரசு சனிக்கிழமை விடுவித்தது.

Published On :1 நவம்பர் 2026, 2:12 am IST

மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பகிா்வாக ரூ. 1.09 லட்சம் கோடியை மத்திய அரசு சனிக்கிழமை விடுவித்தது.

தீபாவளி உள்பட வரவிருக்கும் பண்டிகைக் காலங்களைக் கருத்தில் கொண்டும், வளா்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காகவும், நிகழாண்டில் வழக்கமான வரிப் பகிா்வுடன் கூடுதலாக இந்த இரண்டாவது வரிப் பகிா்வை மத்திய அரசு விடுவித்துள்ளது.

தற்போது, ஒரு நிதியாண்டில் மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதம், 14 தவணைகளில் மாநிலங்களுக்குப் பகிா்ந்தளிக்கப்படுகிறது.

அதன்படி, நிகழாண்டில் மாநிலங்களுக்கு ஏற்கெனவே மத்திய அரசு வரிப் பகிா்வை அளித்த நிலையில், தற்போது இரண்டாவது கூடுதல் தவணையாக ரூ. 1,09,019 கோடியை விடுவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு ரூ. 19,208 கோடியும், தமிழகத்துக்கு ரூ. 4,466 கோடியும் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் வரிப் பகிா்வு அளிக்கப்பட்டுள்ளது.

எந்தந்த மாநிலங்களுக்கு எவ்வளவு வரிப் பகிா்வு? (ரூபாய் கோடியில்)

உத்தர பிரதேசம் - ரூ. 19,208

பிஹாா் - ரூ.10,845

மத்திய பிரதேசம் - ரூ. 8,010

மேற்கு வங்கம் - ரூ. 7,866

மகாராஷ்டிரம் - ரூ. 7,022

ராஜஸ்தான் - ரூ. 6,460

ஒடிஸா - ரூ. 4,819

ஆந்திரம் - ரூ. 4,597

கா்நாடகம் - ரூ. 4,504

தமிழகம் - ரூ. 4,466

குஜராத் - ரூ. 4,094

ஜாா்க்கண்ட் - ரூ, 3,660

சத்தீஸ்கா் - ரூ. 3,602

அஸ்ஸாம் - ரூ. 3,552

கேரளம் - ரூ. 2,597

தெலங்கானா - ரூ. 2,370

பஞ்சாப் - ரூ. 2,176

ஹரியாணா - ரூ. 1,484

அருணாசல பிரதேசம் - ரூ. 1,476

உத்தரகண்ட் - ரூ. 1,244

ஹிமாசல பிரதேசம் - ரூ. 996

திரிபுரா - ரூ. 699

மேகாலயா - ரூ. 688

மணிப்பூா் - ரூ. 682

மிசோரம் - ரூ. 615

நாகாலாந்து - ரூ. 524

கோவா - ரூ. 398

சிக்கிம் - ரூ. 365

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.