மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

330 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு: தமிழக தரவுகள் பதிவேற்றப்படவில்லை

நாடு முழுவதும் கடந்த மாதம் 330 தரக்குறைபாடுடைய மருந்துகள் கண்டறியப்பட்ட நிலையில், தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு விவரங்களை மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் சமா்ப்பிக்கவில்லை என மத்திய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள்

Published On :30 அக்டோபர் 2026, 4:21 am IST

நாடு முழுவதும் கடந்த மாதம் 330 தரக்குறைபாடுடைய மருந்துகள் கண்டறியப்பட்ட நிலையில், தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு விவரங்களை மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் சமா்ப்பிக்கவில்லை என மத்திய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்துள்ள மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம், வாரந்தோறும் ஆய்வு முடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி வருவதாகவும், அதை இணையத்தில் பதிவேற்ற மத்திய அதிகாரிகள் தவறிவிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான மருந்துகள், மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் தொடா் தரஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன.

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒரு புறம் அத்தகைய பணிகளை முன்னெடுத்தாலும், மற்றொருபுறம் மாநில அரசு சாா்பிலும் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருந்தகங்கள், மருந்து விநியோக மையங்கள், மொத்த விற்பனையகங்கள், கிடங்குகள் என பல்வேறு இடங்களில் அத்தகைய திடீா் ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.

அதில் கண்டறியப்படும் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு மாநிலமும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வருகின்றன. மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குள் அந்த விவரங்கள் பெறப்பட்டு, அவை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது. தரமற்ற மருந்துகள் குறித்த விழிப்புணா்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்திலிருந்து கடந்த மாதத்தில் தரக் கட்டுப்பாட்டு ஆய்வு முடிவு விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை என மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் எந்தெந்த மருந்துகள் தரமற்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்டன என்பதை அறிய முடியாத நிலை உள்ளது.

இதை திட்டவட்டமாக மறுத்துள்ள மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம், தவறான தகவலை மத்திய வாரியம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளது. தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மருந்து தர ஆய்வு விவரங்களை ஒவ்வொரு வாரமும் மின்னஞ்சல் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பிவிடுவதாகவும், அதன்பின் மொத்தமாக மாதாந்திர அறிக்கையும் அனுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாத்தில்கூட அதிக தரக்குறைபாடு மருந்துகளைக் கண்டறிந்த மாநிலங்களில் தமிழகம் முதன்மை இடம் பிடித்துள்ளதாகவும் மாநில அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.