மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பருவமழை தீவிரம்: சென்னை எழிலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!

பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு...

cm vijay

சென்னை எழிலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! - படம்: தமிழக அரசு

Published On :22 அக்டோபர் 2026, 5:48 pm IST

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் விஜய் இன்று (அக்.22) ஆய்வு செய்து வருகிறார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதையடுத்து மழை தொடர்பான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளதுடன் பருவமழை தொடர்பாக ஆய்வு செய்தும் வருகிறார்.

தொடர்ந்து இன்று சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு செய்து வருகிறார். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் புகார்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார்.

தலைமைச் செயலர் சாய் குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் உடனிருக்கின்றனர்.

மழை தொடர்பான புகார்களுக்கு மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற எண் மூலமாக தொடர்புகொள்ளலாம்.

Summary

Monsoon: CM Vijay inspects Chennai Ezhilakam State Emergency Operations Centre

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.