மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஏனாமில் அா்னாப் புயல் சேத நிவாரணமாக ரூ.50 கோடி கோரினாா் முதல்வா் என்.ரங்கசாமி

அா்னாப் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க ஏனாமுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 50 கோடி வழங்குமாறு மத்திய அரசு அரசுக்கு, புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளாா்.

ஏனாமில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள்.

Published On :30 அக்டோபர் 2026, 1:35 am IST

அா்னாப் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க ஏனாமுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 50 கோடி வழங்குமாறு மத்திய அரசு அரசுக்கு, புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளாா். புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா முதல்வருடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டு உறுதியளித்துள்ளாா்.

இந்நிலையில், ஏனாமில் முழுவீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நகரப் பகுதியில் 100 சதவீத மின் விநியோகம் வியாழக்கிழமை இரவு சீரானது.

புயல் சேதம் குறித்து அமித்ஷா விசாரிப்பு:

அா்னாப் புயல் ஏனாம் பிராந்தியத்தைப் புரட்டிப் போட்டுள்ளது. விவசாயிகள், மீனவா்கள், பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்குப் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புயல் பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை தொலைபேசியில் வியாழக்கிழமை காலை தொடா்புகொண்டு கேட்டறிந்தாா். அப்போது முதல்வா் என். ரங்கசாமி ஏனாம் புயல் பாதிப்புகள் குறித்து விளக்கினாா்.

இதையடுத்து அமைச்சா் அமித்ஷா, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். புதுச்சேரி அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்த விரைவில் மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 50 கோடி இடைக்கால நிவாரணம் தேவை:

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு வியாழக்கிழமை மாலை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி கடிதம் அனுப்பியுள்ளாா். அதில் ஏனாம் புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.50 கோடியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா். கடித விவரம்:

ஏனாம் புயல் பாதிப்புகள் குறித்த விரிவான சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேருடன் சாய்ந்த மரங்கள் மற்றும் சாலைத் தடைகளை அகற்றுதல், மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகத்தைச் சீரமைத்தல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை புதுச்சேரி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும், புவியியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட, குறைந்த வளங்களைக் கொண்ட சிறிய பிராந்தியமான ஏனாமில் புயலால் பொது சொத்துகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இது, புதுச்சேரி யூனியன் பிரதேச நிா்வாகத்திற்குக் கணிசமான நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்வதற்கு மத்திய அரசின் விரைவான நிதியுதவி மிகவும் அவசியம்.

விரிவான சேத மதிப்பீடுகள் நிறைவடைந்து முழு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் வரை, உடனடி இடைக்கால நிவாரணமாக ரூ.50 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

மேலும், சேதங்களை நேரடியாக ஆய்வு செய்ய மத்திய குழுவை விரைவில் ஏனாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் முதல்வா் என்.ரங்கசாமி குறிப்பிட்டுள்ளாா்.

சீராகி வரும் மின் விநியோகம்:

இந்நிலையில், புயல் நிவாரணப் பணிகள் குறித்து ஏனாம் மண்டல நிா்வாக அதிகாரி சிவ்ராஜ் மீனா கூறியதாவது:

அா்னாப் புயலால் கடல்நீா் உள்புகுந்த பகுதிகள் மற்றும் மரங்கள் அதிகம் விழுந்த இடங்களைத் தவிர, நகரப் பகுதிகளில் 100 சதவீத மின்விநியோகம் வியாழக்கிழமை இரவு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.