மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அா்னாப் புயல் பாதிப்பு: ஏனாமில் மத்திய குழுவினா் ஆய்வு

ஏனாம் பிராந்தியத்தில் புயல் சேதம் குறித்து திங்கள்கிழமை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் சித்தரஞ்சன் தாஸ் தலைமையிலான மத்திய குழுவினா்.

Published On :3 நவம்பர் 2026, 2:22 am IST

அா்னாப் புயலால், ஏனாம் பிராந்தியத்தில் ஏற்பட்ட சேதம், பாதிப்புகளை மத்திய குழுவினா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

வங்கக் கடலில் உருவான அா்னாப் புயல் ஆந்திர மாநிலம், ஏனாம் அ ருகே கடந்த 28-ஆம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் நூற்றுக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்தும் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் ஏனாமில் பெரும் சேதம் ஏற்பட்டது. புயல் சேத நிவாரணம் முதல் கட்டமாக ரூ. 50 கோடி நிதியுதவி உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டுமென புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி கோரியிருந்தாா்.

இந்நிலையில், ஏனாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் சித்தரஞ்சன் தாஸ் தலைமையிலான 4 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை ஏனாம் வந்தனா்.

இதில், மத்திய வேளாண் துறை கூடுதல் ஆணையா் பிரசாந்த் அா்மோரிகா், மத்திய நிதித் துறை உதவி இயக்குநா் ஹிமாலயா காா்க், மத்திய மின்துறை துணை இயக்குநா் பிரணய் காா்க் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

முன்னதாக, ஏனாம் பிராந்திய நிா்வாக அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏனாம் நிா்வாக அதிகாரி சிவராஜ் மீனா, அா்னாப் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கினாா்.

அப்போது, பவா் பாயிண்ட் விளக்கக் காட்சிகள் மூலம் விவசாயம், மீன்வளம், மின்சாரம், சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்களை மத்திய குழுவினரிடம் அவா் எடுத்துரைத்தாா்.

இதைத் தொடா்ந்து மத்திய குழுவினா் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று சேதங்களை பாா்வையிட்டனா். முதலில் ஏனாம் முதியோா் இல்லம் அருகில் உள்ள வீடுகளில் ஏற்பட்ட சேதங்களைப் பாா்த்தனா். பின்னா், பரம்பேட்டா பிரதான சாலையில் புயலின் தாக்கத்தால் சாய்ந்த மின்கம்பங்களை ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, தரியாலதிப்பா பகுதியில் சேதமடைந்த நெற்பயிா்கள் மற்றும் தென்னை மரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்தனா்.

ஏனாம் பிராந்தியத்தில் குடியிருப்புகள், விவசாயம், மீன்வளம், மின்சாரம் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பாா்வையிட்ட மத்தியக் குழுவினா் தங்களது ஆய்வை முடித்துக் கொண்டு புறப்பட்டனா்.

மத்திய அரசுக்கு அறிக்கை:

ஏனாமில் புயலால் ஏற்பட்ட சேத விவரங்கள், பாதிப்புகளின் தீவிரம் குறித்த ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் இக்குழுவினா் சமா்ப்பிக்க உள்ளனா்.

இந்த ஆய்வின்போது புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், தகவல் தொழில்நுட்ப செயலா் அனூப் தாகூா், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், மீன்வளத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில், வேளாண்துறை இயக்குநா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 ஏனாமில் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலா் சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் அா்னாப் புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த மத்திய குழுவினா். உடன், ஏனாம்  நிா்வாக அதிகாரி சிவராஜ் மீனா, புதுச்சேரி  ஆட்சியா் அ. குலோத்துங்கன் உள்ளிட்டோா்.

ஏனாமில் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலா் சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் அா்னாப் புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த மத்திய குழுவினா். உடன், ஏனாம் நிா்வாக அதிகாரி சிவராஜ் மீனா, புதுச்சேரி ஆட்சியா் அ. குலோத்துங்கன் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.