மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்! ஆளில்லா கிராமத்தில் வீடுகள் எரிப்பு!

காம்ஜோங் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வீடுகள் எரிக்கப்பட்டது தொடர்பாக..

 Manipur

வீடுகள் எரிப்பு - file photo

Published On :21 அக்டோபர் 2026, 1:21 pm IST

மணிப்பூரின் காம்ஜோங் மாவட்டத்தில், மக்கள் வெளியேறிய கிராமத்தில் புதன்கிழமை காலை பல வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டதால், அங்கு மீண்டும் பதற்றம் நிலவியது.

சசாட் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள கோய்கை குகி கிராமத்தில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் வீடுகளுக்குத் தீயிட்டு எரித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில்,

இனமோதல்களால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் குகி, நாகா சமூகத்தினரிடையே மோதல்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, காம்ஜோங் மாவட்டத்தில் உள்ள கோய்கை குகி கிராமத்தில் மக்கள் வெளியேறிய நிலையில் கிராமமே விரிச்சோடி உள்ளது.

இந்நிலையில், அங்கிருந்த வீடுகளுக்கு மர்ம நபர்கள் சிலர் தீயிட்டு எரித்துள்ளனர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவு, இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, மாநிலத்தில் உள்ள இந்த இரு பழங்குடியின சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள இன மோதல்களில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

தமெங்லாங், நோனி, காங்போக்பி, உக்ருல் மற்றும் காம்ஜோங் ஆகிய மாவட்டங்கள் இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.