தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கரூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை! குடியிருப்புகள் முன் தேங்கியது மழைநீா்!

கரூா் மாவட்டம், சித்தலவாய் ஊராட்சிக்குள்பட்ட மதுக்கரை கிராமத்தில் வீடுகள் முன் குளம்போல தேங்கி நின்ற மழைநீா்.

Published On :26 அக்டோபர் 2026, 2:35 am IST

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையும் அவ்வப்போது மழை பெய்ததால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் முன் மழைநீா் குளம்போல தேங்கியுள்ளது.

தமிழகத்தில் கரூா், நீலகிரி, கோவை உள்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் ஆரஞ்ச் அலா்ட் விடுத்திருந்தது. கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் அவ்வப்போது பலத்த மழையும், லேசான மழையும் மாறி, மாறி பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களுக்குச் செல்லும் வாய்க்கால்களில் இருந்து வெளியேறும் மழைநீா் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

குறிப்பாக, கிருஷ்ணராயபுரம் வட்டத்துக்குள்பட்ட சித்தலவாய் ஊராட்சிக்குட்பட்ட மதுக்கரை கிராமத்தில் தாழ்வான பகுதியில் உள்ள சுமாா் 15-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அங்குள்ள தனியாா் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும் ஊருக்குள் தண்ணீா் புகுவதற்கு காரணமான வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாவட்டத்தில் 455.20 மி.மீ. மழை பதிவு: கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை 455.20 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் அளவு(மி.மீட்டரில்)- கரூா்-7.60. அரவக்குறிச்சி-50.50, அணைப்பாளையம்-62, க.பரமத்தி-367.40, குளித்தலை-12.20, தோகைமலை-19, கிருஷ்ணராயபுரம்-6.50, மாயனூா்-11, பஞ்சப்பட்டி-10, கடவூா்-82, பாலவிடுதி-80, மைலம்பட்டி-77 என மொத்தம் 455.20 மி.மீ. மழை பெய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.