மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காங்கிரஸ் அரசியல் எதிர்காலத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி: பாஜக விமர்சனம்!

இந்தியா கூட்டணியின் பேரணியை முட்டாள்தனமான நாடகம் என்றும், காங்கிரஸின் அரசியல் எதிர்காலத்தின் சவப்பெட்டி மீது அடிக்கப்பட்ட கடைசி ஆணி என்றும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

ஜே.பி. நட்டா - ANI

Published On :1 நவம்பர் 2026, 7:31 pm IST

இந்தியா கூட்டணியின் பேரணியை முட்டாள்தனமான நாடகம் என்றும், காங்கிரஸின் அரசியல் எதிர்காலத்தின் சவப்பெட்டி மீது அடிக்கப்பட்ட கடைசி ஆணி என்றும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் தில்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இன்று (நவ. 1) நடைபெற்றது.

நண்பகல் 12 மணியளவில் தில்லியின் மிண்டோ சாலை - கோனாட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி ராம்லீலா திடல் வரை பேரணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராம் லீலா திடலில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தப் பேரணியை விமர்சித்து பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.

1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களின் நினைவு நாளன்று இந்தப் பேரணி நடப்பதாகக் குறிப்பிட்ட நட்டா, அதேநாளில் பேரணியை ஏற்பாடு செய்ததன் மூலம் சீக்கிய சகோதரர்களின் காயங்களை ராகுல் காந்தி மேலும் பெரிதாக்குவதாக குற்றம் சாட்டினார்.

அவர் பேசுகையில், “தில்லியில் கலவரங்களையும் அராஜகத்தையும் ஏற்படுத்தி, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்ப்பது, பண்டிகைக் காலத்தில் தில்லி வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பது, நாட்டின் நற்பெயரைக் கெடுப்பது ஆகியவையே இந்தப் பேரணியின் நோக்கங்கள்.

நவம்பர் 1 என்பது இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் மிக மோசமான, இருண்ட கறை. அன்றைய தினம்தான், காங்கிரஸின் ஆதரவு பெற்ற குண்டர்கள் நமது அப்பாவி சீக்கிய சகோதரர்களைப் படுகொலை செய்தனர். ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் ஒரே இரவில் வீடற்றவர்களாக மாறினர்.

இன்று ராம்லீலா மைதானத்தில் நடப்பது ஜனநாயகத்திற்கு அளிக்கும் மரியாதை அல்ல. மாறாக, ஜனநாயகத்தை அராஜகத்திற்கும் குழப்பத்திற்குள்ளாக்க திட்டமிடப்பட்ட ஒரு சதி.

மக்களால் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்ட நபர்கள் நடத்தும் முட்டாள்தனமான, திட்டமிடப்பட்ட நாடகம் இது. அதை, மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.

கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள் ராகுல் காந்தி அவர்களே. நவம்பர் 1 ஆம் தேதியின் இருண்ட வரலாற்றை உங்களால் மறைக்க முடியாது. தில்லி வணிகர்களின் கண்ணீருக்குப் பதில் சொல்லாமல் உங்களால் தப்பிக்க முடியாது. உங்கள் கூட்டணியின் இந்தப் பேரணி, காங்கிரஸின் அரசியல் எதிர்காலத்தின் சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் இறுதி ஆணியாக அமையும்" என்று பேசியுள்ளார்.

Summary

The final nail in the coffin of the Congress party's political future: BJP's criticism!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.