மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக தில்லி ராம்லீலா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது குறித்து...

India bloc congress Rahul gandhi

ராகுல் காந்தி - ஏஎன்ஐ

Published On :1 நவம்பர் 2026, 6:35 pm IST

எஸ்ஐஆர் மூலம் நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (நவ. 1) தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

இதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் தில்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

நண்பகல் 12 மணியளவில் தில்லியின் மிண்டோ சாலை - கோனாட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி ராம்லீலா திடல் வரை பேரணி நடைபெற்றது. ராம் லீலா திடலில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்றாக மேடையில் தோன்றி மக்கள் முன்பு உரையாற்றினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

''வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் மூலம் நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமான ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். அவர் சிறைக்கு நிச்சயம் அனுப்பப்படுவார்.

2024 மக்களவைத் தேர்தலில் 3% வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது. தேர்தல் ஆணையம் இதுவரை 13 கோடி வாக்காளர்களை முறைகேடானவர்கள் எனக்கூறி நீக்கியுள்ளது. இதன்மூலம் 2024-ல் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஜனநாயகத்தை அழிக்க விடமாட்டோம். வாக்குத் திருட்டு மூலம் ஜனநாயகத்தை சிதைக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

அ15% of the country's total voters removed through SIR: Rahul

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.