மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஞானேஷ் கைது செய்யப்பட்டால் 30 விநாடியில் போராட்டங்கள் நிறுத்தப்படும்! ராகுல்

ஞானேஷ் கைது செய்யப்பட்டால் போராட்டங்கள் நிறுத்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தது பற்றி...

ராகுல் காந்தி

ராகுல் காந்தி - ANI

Published On :26 அக்டோபர் 2026, 4:19 pm IST

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கைது செய்யப்பட்டால் 30 விநாடிகளில் போராட்டங்கள் நிறுத்தப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டத்தின் முக்கிய கட்டமாக தில்லி ராம்லீலா மைதானத்தில் வருகின்ற நவ. 1ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளதாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளனர். இதில், 10 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக வரும் கடைசி வார இறுதி நாளில் போராட்டம் நடத்தினால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று தில்லி வணிகர்கள் கவலை தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,

“தில்லியில் உள்ள அனைத்து வணிகர்களுக்கும் - நாங்கள் உங்களை நேசிக்கிறோம், உங்கள் கருத்துகளைக் கேட்கிறோம். மத்திய அரசு மெட்ரோ சேவையை நிறுத்தி, சாலைகளை அடைத்து, தலைநகரையே முடக்கியுள்ளது.

வாக்குரிமைகள் திருடப்பட்டிருக்கும் சூழலில், இங்கு எதுவுமே பாதுகாப்பானதல்ல. உங்கள் கடை, சேமிப்பு, குழந்தைகளின் எதிர்காலம் என அனைத்தும் ஆபத்தில் இருக்கின்றன.

குற்றம்சாட்டப்பட்ட நான்காவது நபரான ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்குங்கள் என்று மோடியிடம் கூறுங்கள். அது நடந்தால் அடுத்த 30 விநாடிகளில் போராட்டங்கள் முடிவுக்கு வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

If Gyanesh is arrested, the protests will end in 30 seconds! — Rahul

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.