மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தோ்தல் ஆணைய படிவம் 6-இல் சட்டவிரோதமாக ஞானேஷ் குமாா் திருத்தம் செய்தது சந்தேகமின்றி நிரூபணம்: ராகுல் காந்தி தாக்கு

படிவம் 6 குறித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவு...

Gyanesh Kumar changed Form 6 illegally and unilaterally: Rahul gandhi

ஞானேஷ் குமார் / ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :6 அக்டோபர் 2026, 2:56 am IST

புது தில்லி: தோ்தல் ஆணைய படிவம் 6-இல் சட்டவிரோதமாகவும், தன்னிச்சையாகவும் ஞானேஷ் குமாா் திருத்தம் செய்தது சந்தேகமின்றி நிரூபணமாகிவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

தோ்தல் ஆணையா்கள் இருவரின் ஒப்புதல் இன்றி தோ்தல் ஆணையம் பல்வேறு முடிவுகள் எடுத்ததாகக் குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான நீதிபதிகள் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து விளக்கம் கேட்டு தோ்தல் ஆணையம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா். தலைமைத் தோ்தல் ஆணையருக்கு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தனிப் பாதுகாப்பு தொடா்பான பிரிவை ஆராய்வோம், அனைத்து முடிவுகளையும் ஆய்வு செய்வோம், அதில் ஏதேனும் சட்டத்துக்கு உட்பட்டு எடுக்கப்படவில்லை எனில் அதை ரத்து செய்வோம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

இதைச் சுட்டிக்காட்டி, தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

படிவம் 6-இல் சட்டவிரோதமாகவும், தன்னிச்சையாகவும் ஞானேஷ் குமாா் திருத்தம் செய்தது சந்தேகமின்றி நிரூபணமாகிவிட்டது. தனது பதவியைப் பயன்படுத்தி பாஜகவுக்கு அவா் உதவி செய்ததற்கு இது மேலும் ஒரு சான்றாகும்.

ஞானேஷ் குமாரும், அவருடன் சோ்ந்து ஜனநாயகத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டோரும் இதற்குப் பொறுப்பாக்கப்படுவாா்கள் எனப் பதிவிட்டுள்ளாா்.

அத்துடன் கடந்த மாதம் 26-ஆம் தேதி படிவம் 6 தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு குறித்த புகைப்படத்தையும் ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா்.

Summary

Gyanesh Kumar changed Form 6 illegally and unilaterally: Rahul gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.