ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி நடத்துவது குறித்து...

ராம்லீலா திடலில்... - படம் - பிடிஐ

Published On :1 நவம்பர் 2026, 12:28 pm IST

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தில்லியில் இந்தியா கூட்டணி பேரணியை ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) தொடங்கியது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் தில்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

பேரணியானது நண்பகல் 12 மணியளவில் தில்லியில் மிண்டோ சாலை - கோனாட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி ராம்லீலா திடலை அடைகிறது. பின்னர் அங்கு மாலை 5 மணி வரை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அங்கு, இந்தியா கூட்டணியைச் சார்ந்த முக்கியத் தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்தப் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். ஆகையால், தில்லியில் 13,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, இந்தியா கூட்டணி நேற்று (அக். 31) நடத்திய மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

The INDIA alliance began a rally in Delhi on Sunday (Nov. 1) to demand the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.