தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

யமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!

யமுனையின் சுத்தத்தை நிரூபிப்பதற்காக நதியில் குளித்த பாஜக எம்.பி. குறித்து...

BJP MP manoj tiwari

மனோஜ் திவாரி - எக்ஸ்

Published On :29 அக்டோபர் 2026, 10:08 pm IST

கடந்த 27 ஆண்டுகளாக காங்கிரஸ், ஆம் ஆத்மி செய்யாத செயலை பாஜக அரசு செய்துள்ளதாக யமுனை நதியின் சுத்தம் குறித்து அக்கட்சியின் எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

இதனை, நிரூபிக்கும் வகையில் யமுனை நதியில் நீச்சலடித்து குளித்தார். இந்த விடியோவை பாஜக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இது தொடர்பாக யமுனை நதியில் மனோஜ் திவாரி குளிக்கும் விடியோவை குறிப்பிட்டு பாஜக பதிவிட்டுள்ளதாவது:

''நேரடி உண்மைச் சோதனை; கடந்த 27 ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரால் செய்ய முடியாத காரியத்தை, தில்லியில் உள்ள பாஜக அரசு வெறும் இரண்டே ஆண்டுகளில் செய்து காட்டியுள்ளது.

தில்லியில் யமுனை நதி பாதியளவுக்கும் மேலாகச் சுத்தம் செய்யப்பட்டுள்ளது, மீதமுள்ள பகுதியும் விரைவில் சுத்தம் செய்யப்படும்!

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி, யமுனை நதியில் நேரடியாக இறங்கிக் குளித்து, தில்லியில் 30 கி.மீ நீளத்திற்கு யமுனை நதி தூய்மையாக இருப்பதை நேரலையில் காட்டியுள்ளார். கேஜரிவால், நீங்கள் எப்போது வந்து இதில் குளிக்கப் போகிறீர்கள்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

Summary

BJP MP proves Yamuna River is clean something Congress and Aam Aadmi Party failed to achieve

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.