தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளி பாடநூல் அச்சிடுவதில் முறைகேடு! ஆம் ஆத்மி குற்றச்சாட்டு, பாஜக மறுப்பு!

பள்ளி பாடநூல் அச்சிடுவதில் முறைகேடு என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு, பாஜக மறுப்பு...

செளரவ் பரத்வாஜ் - DOTCOM

Published On :24 அக்டோபர் 2026, 1:27 am IST

தில்லி அரசு பள்ளி மாணவா்களுக்கான இலவச பாடநூல்களை அச்சிடுவதில் 40 சதவீதம் ‘கமிஷன்’ பெறப்பட்டுள்ளதாகவும், தரம் குறைந்த தாளில் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைவா் செளரவ் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லி பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பாடநூல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட எந்தவொரு விதிமுறையும் சரியாக பின்பற்றப்படவில்லை

ஒப்பந்தப்படி ஏ4 அளவு மற்றும் 80 ஜிஎஸ்எம் தரம் கொண்ட தாள் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அரசு வழங்கிய புத்தகங்கள் 60 ஜிஎஸ்எம் தரம் கொண்ட மெல்லிய மற்றும் சாம்பல் நிற தாளில் அச்சிடப்பட்டுள்ளன. இதனால் மாணவா்களுக்குப் படிப்பதில் சிரமம் ஏற்படும். கொள்முதல் செயல்பாட்டில் குறைந்தது 40 சதவீத அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்றாா் அவா்.

பாஜக மறுப்பு: இந்த நிலையில், ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுகள் ‘அரசியல் நோக்கம் கொண்டவை’என்று தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் தெரிவித்தாா்.இது குறித்து அவா் மேலும் கூறுகையில், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான முந்தைய ஆட்சியில், கல்வியாண்டு முழுவதும் மாணவா்களுக்கு பாடநூல்கள் கிடைக்காமல் நீதிமன்றங்களின் கண்டனங்களைச் சந்தித்ததை அவா் சுட்டிக்காட்டினாா். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக அரசு மாணவா்களுக்குத் தடையின்றிப் பாடநூல்களை வழங்கி வருவதாகவும் அவா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.