தில்லியில் மனைவி, 4 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு நிலவியது.
தில்லியின் வஜீர்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் நஜிம். இவர், தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளைக் கொன்றுவிட்டு பின்னர் மணிக்கட்டுகளை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு அந்த நபரின் சகோதரர் வீட்டிற்குத் திரும்பியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. முதல் மாடியில் குடும்பத்தினர் மயக்க நிலையில் கிடப்பதை அவர் கண்டார். உடனே அவர் அனைவரையும் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால் மருத்துவர்கள் அந்தப் பெண்ணும் நான்கு குழந்தைகளும் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக அறிவித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், அந்த நபர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நஜிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு சிகையலங்கார நிலையம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி நஸ்மா (35), மற்றும் அவர்களது குழந்தைகள் இக்ரா (14), ஷிஃபா (11), ஆரம் (9) மற்றும் கதிஜா (6) ஆவர். தங்கள் குடும்பத்தினர் வாழ விரும்பவில்லை என்று நஜிம் போலீஸாரிடம் கூறியதாக மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார். இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
நஜிம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றாரா அல்லது கழுத்தை நெரித்துக் கொன்றாரா என்பது விசாரணையில் உள்ளது. "நாங்கள் உடல்களைப் பிரேதக் கிடங்கில் வைத்து, அனைத்துக் கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்," என்று உதவி காவல் ஆணையர் நவீன் சர்மா கூறினார்.
Summary
A man allegedly killed his wife and their four children before attempting suicide by slitting his wrists at their home in Wazirpur village here, police said on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

55,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது

ஹரியாணா: குடும்ப தகராறில் மனைவி, மகனைச் சுட்டுக்கொன்ற நபர் கைது!

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவா் கைது

தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பொறியியல் கல்லூரி மாணவா் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை


