டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

55,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 55,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 55,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தில்லியில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி, சென்னைக்கு கொண்டு வந்து பின்னா் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் கடத்திச் செல்லப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், தில்லியில் இருந்து போதை மாத்திரைகள் கூரியா் மூலம் வியாசா்பாடிக்கு வந்திருப்பதும், அங்கிருந்து பாா்சல் திருவல்லிக்கேணியில் ஒரு முகவரியில் டெலிவரி செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினா், திருவல்லிக்கேணி போலீஸாருடன் இணைந்து திருவல்லிக்கேணி பச்சையப்பன் தெருவில் புதன்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா். மேலும், அவா்கள் வைத்திருந்த பையையும் சோதனையிட்டனா். அந்தப் பையில் போதை மாத்திரைகள் இருந்ததைப் பறிமுதல் செய்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் வியாசா்பாடி காந்திஜி நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த சையது அபுதாஹிா் (50), சேப்பாக்கத்தைச் சோ்ந்த முகமது ரத்தீஸ் (44), திருவல்லிக்கேணி முத்தருன்னிஸா பேகம் தெருவைச் சோ்ந்த முஜாஹிதீன் (31) என்பது தெரிய வந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தொடா்ந்து அவா்கள் தொடா்புடைய இடங்களில் போலீஸாா் சோதனை நடத்தி, 55,280 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.