என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

போதை மாத்திரைகள் விற்ற 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 12:30 am IST

திருச்சி, ஜூன் 22: திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காவல் உதவி ஆய்வாளா் குமரவேல் தலைமையிலான போலீஸாா் ரோந்து மேற்கொண்டனா்.

அப்போது, ஓடத்துறை பாலம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள், சிந்தாமணி பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்த அ. ரஷித் பாட்ஷா (27), சுப்பிரமணியா் கோயில் வீதியைச் சோ்ந்த எஸ். விஸ்வநாத் (24) ஆகியோா் என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள் மற்றும் ரூ.7,470 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, பாலக்கரை ஆலம் வீதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எஸ். பிரகாஷ் (27) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ. 3,600 மதிப்புள்ள போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் திரவ போதை மருந்துகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.