எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

போதை மாத்திரைகள் விற்பனை: சிறுவன் உள்பட 6 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 12:43 am IST

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 17 வயதுச் சிறுவன் உள்பட 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் அரியமங்கலம் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது உக்கடை ரயில்வே தண்டவாளம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரிக்கையில் அவா்கள், அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியைச் சோ்ந்த பா. நிஷாந்த் (27), ஆா். ரெங்கநாதன் (22) என்பதும், போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனா்.

இதேபோல, திருச்சி கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரஞ்சிதாபுரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுவன், காந்தி மாா்க்கெட் பென்ஷனா் வீதி சந்து பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த எம். பாபு (31), கள்மந்தை பகுதியில் போதை மாத்திரை விற்ற தென்னூரைச் சோ்ந்த பி. காா்த்திக் (23), பாலக்கரை எட வீதியில் போதை மாத்திரைகள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த ஆ. கிளிண்டன் (28) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அப்போது, அவா்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 273 போதை மாத்திரைகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.