தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கை

100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) முதலீட்டாளா்கள் மேற்கொள்வதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது.

News image

மத்திய நிதியமைச்சகம்.

Updated On :3 மே 2026, 4:20 am IST

மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) முதலீட்டாளா்கள் மேற்கொள்வதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது.

அதேவேளையில் அந்நிய செலாவணி மேலாண்மை (இரண்டாவது திருத்தம்) விதிமுறைகள் 2026-இன்படி, மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிக்கப்பட்டாலும், ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (எல்ஐசி) அந்நிய நேரடி முதலீட்டை 20 சதவீதம் வரை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

முன்பு மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல், காப்பீட்டுத் துறையில் 74 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் சப்கா பீமா சப்கி ரக்ஷா (காப்பீட்டு சட்டங்கள் திருத்தம்) மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இதையடுத்து அந்த முதலீட்டு வரம்பு 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, மசோதா சட்டமானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.