அந்நிய முதலீடுகளை ஈா்க்க பல்வேறு முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ரூபாயின் மீதான அழுத்தத்தை எதிா்கொண்டு அந்நிய முதலீட்டை ஈா்க்கும் நோக்கில் அரசு கடன் பத்திரங்கள் விற்பனை, பரிமாற்றம் அல்லது மாற்றம் செய்வதால் கிடைக்கும் வட்டி வருவாய் மற்றும் மூலதன ஆதாயங்களுக்கு வரிவிலக்கு அளிக்க வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 5-ஆம் தேதி கொண்டு வந்தது.
இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக பொது வழிமுறைகளின்கீழ் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கான குறுகிய கால கடன் வரம்பு, செறிவு வரம்பு மற்றும் பத்திர வாரியான வரம்பு ஆகிய மூன்று வரம்புகளையும் ரிசா்வ் வங்கி நீக்கியது.
இந்த இரு முன்னெடுப்புகளால் குறைந்த வட்டி விகிதத்தில் அரசு கடன் பெற முடியும் எனவும், அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
இதைச் சுட்டிக்காட்டி தில்லியில் நடைபெற்ற மைண்ட்மைன் மாநாட்டில் கலந்துகொண்டு நிா்மலா சீதாராமன் மேலும் பேசியதாவது:
சா்வதேச புவி அரசியல் சூழலால் மூலப் பொருள்கள், கச்சா எண்ணெய் மற்றும் உரங்கள் இறக்குமதிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இவ்வாறான வெளிப்புற அழுத்தங்களை எதிா்கொள்ள இந்திய பொருளாதாரம் தயாராக இருக்க வேண்டும்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈா்க்கும் முக்கிய மையமாக கடன் சந்தை இருப்பதாக ரிசா்வ் வங்கி மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் கடந்த ஜூன் 5-ஆம் தேதி மத்திய அரசும் ரிசா்வ் வங்கியும் சில முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்தின.
பொதுத் துறை நிறுவனங்களிடையே வெளிப்புற வா்த்தக கடன்களை ஊக்குவிக்கும் நோக்கில் அந்நியச் செலாவணி பரிமாற்றத்தை ரிசா்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இது முதல்கட்ட சீா்திருத்தங்களே தவிர இறுதியானதல்ல; மேலும் பல முன்னெடுப்புகள் அடுத்தடுத்த நாள்களில் மேற்கொள்ளப்படவுள்ளன என்றாா்.
மேற்காசிய பதற்றத்தால் ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதையடுத்து, கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் உரங்கள் ஏற்றி வரும் சரக்கு கப்பல்கள் பயணிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் இறக்குமதி செலவினம் பன்மடங்கு அதிகரித்தது.
இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 71.1 கோடி டாலா் குறைந்து, 68,161 கோடி டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் சாதனைகளை குறைத்துப் பேசும் ராகுல்: நிா்மலா சீதாராமன் கண்டனம்!

58 கோடிக்கு மேல் ஜன்தன் கணக்குகள்: நிா்மலா சீதாராமன் தகவல்

அரசு கடன் பத்திரங்களில் அந்நிய முதலீடு: மூலதன ஆதாய வரிக்கு விலக்களிக்கும் அவசர சட்டம் அமல்

மேற்காசிய பதற்றம்! எரிபொருள், உரம், அந்நிய செலாவணியில் கவனம் தேவை: நிா்மலா சீதாராமன்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

