செங்கல்பட்டு, ஏப். 27- சென்னை மத்திய சிறையை நகருக்கு வெளியே மாற்ற ஏற்ற தொரு இடத்தை தெரிந்தெடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
மாமல்லபுரம் அருகே ஒரு கிராமத்திலுள்ள 100 ஏக்கர் நிலம் அதற்கு ஏற்ற இடம் என்று யோசனை கூறப்படவே, அந்த இடத்தை சிறைகள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நேற்று பார்வையிட்டார்.
விரைவில் இந்தியா - பாக். பேச்சு - உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும்
புது டில்லி. ஏப். 27 - விமானப் போக்குவரத்து (ஒரு நாட்டின் விமானங்கள் மற்றொரு நாட்டின்மீது பறப்பது உள்பட) ரயில், சாலை போக்குவரத்துகள் ஆகியவைகளை ஏற்படுத்துதல், மீண்டும் தூதுவ உறவைப் புதுப்பித்தல் ஆகிய விஷயங்களில் உடன்படிக்கைகள செய்து கொள்வதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் மிக விரைவில் பேச்சுக்கள் நடத்தும்.
இஸ்லாமாபாத்தில், அநேகமாக வெளிநாட்டுச் செயலாளர்கள் மட்டத்தில், இந்தப் பேச்சு நடைபெறும்.
இந்தப் பேச்சுக்கள் பற்றிய விவரங்களை முடிவு செய்வதற்காக இரு நாடுகளின் வெளிநாட்டு செயலாளர்களும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முன்பு, கடந்த ஆண்டு மே மாதம் டில்லியில் இந்தியா, பாகிஸ்தான் பேச்சு நடந்தது. ஒரு நாட்டின் விமானங்கள் மற்றொரு நாட்டின் மீது பறப்பது பற்றித்கான் முக்கியமாக அந்தப் பேச்சு நடந்தது.
ஆனால் விமானங்கள் பறப்பது பற்றி எந்தவிதமான உடன்பாடும் ஏற்படாமலேயே அந்தப் பேச்சு முடிவடைந்தது. சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் முன்பு, தான் தொடுத்திருந்த வழக்கை வாபஸ் பெறப் பாகிஸ்தான் மறுத்ததே அந்தப் பேச்சு தோல்வியுற்றதற்குக் காரணம்.
ஆனால் கடந்த மார்ச் 27 தேதியன்று பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ, இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய ஒரு கடிதத்தில், அந்த வழக்கை வாபஸ் பெறப் பாகிஸ்தான் தயாராய் இருப்பதாகக் கூறினார்.
அதன் பேரில் மீண்டும் இரு நாடுகளுக்குமிடையே அதிகாரி கள் மட்டத்தில் பேச்சு நடத்தத் தயாராய் இருப்பதாக ஏப்ரல் 11ம் தேதியன்று இந்திரா காந்தி பூட்டோவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதற்கு ஏப்ரல் 18ந் தேதியன்று பூட்டோ அனுப்பிய பதிலில், பாரதப் பிரதமர் யோசனைக்கு சம்மதம் தெரிவித்தார். ...
Summary
April 28, 1976: Attempt to relocate the Chennai Central Prison to another site.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசித்த ஆளுநர்!

மத்திய அரசின் தடைக்கு எதிர்ப்பு! டெலிகிராம் நிறுவனம் வழக்கு!

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க 8 வாரங்கள் கெடு

கோவை மத்திய சிறையில் காவலர் மீது கைதிகள் தாக்குதல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை


