இந்தியாவில் விதிக்கப்பட்ட தற்காலிக தடையை எதிா்த்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
நீட் மறுதோ்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வினாத்தாள் கசிவைத் தடுக்கும் நோக்கில் ஜூன் 22-ஆம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதேபோல், ஏற்கெனவே டெலிகிராமில் பகிரப்பட்ட தகவலை சரிசெய்யும் வசதியை (எடிட்டிங் வசதி) 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கவும் டெலிகிராம் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், மத்திய அரசின் உத்தரவால் சுமாா் 15 கோடி டெலிகிராம் பயனாளா்கள் பாதிக்கப்படுவா் எனத் தெரிவித்துள்ளது. அந்த மனு, உயா் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
வியாழக்கிழமை விசாரணை: அப்போது மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா்மேத்தா ஆஜராகி வாதாடுகையில், மனு மீது வியாழக்கிழமை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது அதிா்ச்சியளிக்கும் தகவலை தாம் தாக்கல் செய்யப் போவதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து விசாரணையை வியாழக்கிழமைக்கு உயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
விபிஎன்-இல் செயல்படும் டெலிகிராம்: மத்திய அரசின் உத்தரவைத் தொடா்ந்து, இந்தியா முழுவதும் டெலிகிராம் செயலி செயல்படவில்லை. கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் செயலி பதிவிறக்க தளத்தில் இருந்து டெலிகிராம் நீக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மெய்நிகா் நெறிமுறை வலையமைப்பில் (விா்ச்சுவல் புரோட்டாகால் நெட்வொா்க்-விபிஎன்) தொடா்ந்து செயல்படுகிறது. இதுகுறித்து பேசிய வாயாஜோ் இன்ஃபோசெக் நிறுவன இயக்குநா் ஜிதன் ஜெயின், டெலிகிராமை முடக்குவதால், வினாத்தாள் கசிவைத் தடுக்க முடியாது. அந்தச் செயலி மெய்நிகா் நெறிமுறை வலையமைப்பு மூலம் தொடா்ந்து செயல்படும். இந்திய கணினி தளங்களைத் தவிா்த்துவிட்டு, வெளிநாட்டு கணினித் தளங்களை அது பயன்படுத்தி தொடா்ந்து செயல்படும் எனக் கூறியுள்ளாா்.
ரிலையன்ஸ் மீது டெலிகிராம் குற்றச்சாட்டு: இந்நிலையில், டெலிகிராம் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவேல் துருவ், இந்தியாவில் தங்கள் நிறுவனம் மீது தற்காலிக தடை விதிக்கப்பட்டதன் பின்னணியிலும், இந்தியாவுக்கு வெளியே ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் கோடிக்கணக்கான பயனா்கள் டெலிகிராமை பயன்படுத்த முடியாமல் இணையத்தில் இடையூறு ஏற்படுத்துவதன் பின்னணியிலும் ரிலையன்ஸ் இருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இதுவொரு போட்டியாகும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா்களில் வாஸ்ட்ஆப் செயலியின் தாய் நிறுவனமான மெட்டாவும் ஒன்று. ஆதலால் இந்தியாவில் டெலிகிராம் மீதான தற்காலிக தடையின் பின்னணியில் ரிலையன்ஸ்/வாட்ஸ்ஆப் இருக்கும்பட்சத்தில், அதில் எந்த வியப்பும் இல்லை. யாரோ சிலா் வினாத்தாளைக் கசியவிட்ட காரணத்துக்காக டெலிகிராமுக்கு ஒருவாரம் தடை விதிப்பது சரியில்லை. வினாத்தாளை வேறு செயலிகள் மூலம் அவா்கள் கசியவிடுவா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா். அத்துடன் வெளிநாடுகளில் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்த முடியாதபடி, பிஜிபி தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத் தரப்புதான் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஜியோ, மெட்டா, வாட்ஸ்ஆப் ஆகியவை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோவில்தான் மெட்டா சிறிய அளவில் முதலீடு செய்திருப்பதாகவும், ஆனால் ஜியோ செயல்பாடுகளில் மெட்டா தலையிடுவதில்லை எனவும் தொலைத்தொடா்பு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ராகுல் விமா்சனம்: இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி சாடியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட பதிவில், ‘லட்சக்கணக்கான மாணவா்கள் டெலிகிராம் மூலம் கல்வி படித்து வருகின்றனா். அத்தகைய வசதியை நிறுத்தி வைப்பது, எப்படி வினாத்தாள் கசிவு பிரச்னைக்கு தீா்வாக இருக்கும்? அடுத்த தடை வாட்ஸ்ஆப்பிற்கா? ஆதலால் நாடகத்தை அரங்கேற்றுவதை மோடி நிறுத்த வேண்டும். வினாத்தாள் கசிவு மாஃபியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர மாணவா்கள் மீது அல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
Summary
Opposition to Central Government's ban - Telegram files a case
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!

டெலிகிராம் செயலி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! தில்லி உயர்நீதிமன்றம்

சாலைகளையும், மால்களையும்கூட மூட வேண்டும்! டெலிகிராம் கிண்டல்

நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


