இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வையொட்டி (மறுதேர்வு) டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்தது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் டெலிகிராம் செயலி வாயிலாக முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறவுள்ளது.
நீட் மறுதேர்வை எந்தவித முறைகேடுமின்றி சுமூகமாக நடத்தி முடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அந்தவகையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-ன் படி டெலிகிராம் செயலிக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே அனுப்பப்பட்ட செய்திகளைத் திருத்தும் வசதியை (message-editing feature) 30 ஜூன் 2026 வரை முடக்குமாறு டெலிகிராம் தளத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பாவெல் டுரோவ், இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையானது, 15 கோடி பயனர்களுக்கான தண்டனை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:
''இந்திய அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு லட்சக்கணக்கான பயனர்களை நியாயமற்ற முறையில் பாதிக்கிறது. இந்தியாவில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமான பனர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை இது.
சில பயனர்கள் கசிந்த தேர்வு வினாத்தாள்களை பகிர்ந்துகொண்டதால், ஒரு வார காலத்திற்கு டெலிகிராம் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வினாத்தாள் கசிவானது இதன்மூலம் நின்றுவிடப்போவதில்லை. அது மற்ற செயலிகளுக்கு மாறிவிட்டன'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Telegram CEO criticises restrictions on platform ahead of NEET-UG test, says "punishes 150M users in India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!

டெலிகிராம் செயலி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! தில்லி உயர்நீதிமன்றம்

சாலைகளையும், மால்களையும்கூட மூட வேண்டும்! டெலிகிராம் கிண்டல்

நீட் மறுதேர்வு: டெலிகிராம் செயலிக்கு தடை ஏன்? என்டிஏ இயக்குநர் விளக்கம்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு


