பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜிவி பிரகாஷ் - கௌதம் மேனனின் 13 படத்தின் முக்கிய அறிவிப்பு!

நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள ‘13’ என்ற படத்தின் அப்டேட் குறித்து...

Poster for the film '13' by GV Prakash and Gautham Menon

ஜிவி பிரகாஷ் - கௌதம் மேனனின் 13 படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / கே விகேக்

Published On :29 அக்டோபர் 2026, 7:12 pm IST

நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள ‘13’ என்ற படத்தின் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கே. விவேக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த 2022ல் முதல் பார்வை போஸ்டர், டீசர் வெளியாகியது. இந்த நிலையில், இந்தப் படம் டிசம்பர் வெளியீடாக வரவிருக்கிறது.

இந்தப் படத்தை மெட்ராஸ் ஸ்டூடியோஸ், அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறார்கள். இந்தப் படத்தில் ஆதித்யா கதிர், பவ்ய திரிகா, ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் முடிக்கப்பட்டு வெளியாக இருக்கிறது.

கடந்த 2022ல் டீசர் வெளியானது. பின்னர், இந்த சில பிரச்னைகளால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டீசர் விடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. டிசம்பருக்கு வரும் இந்தப் படத்தினைக் குறித்து இயக்குநர் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், படத்தின் நல்ல மற்றும் தீய சக்திகளின் முகங்கள் வரும் அக்.31ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுமென படக்குழு அறிவித்துள்ளது.

யூடியூபராக நடித்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார், தனது நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து விசித்திரமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட சூழலில் சிக்கிக்கொள்ளும் கதையில் நடித்துள்ளார்.

Summary

Major announcement regarding the GV Prakash - Gautham Menon film '13'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.