கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓடிடியில் வெளியானது ஜிவி பிரகாஷின் இம்மோர்டல்!

இம்மோர்டல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியிருப்பது தொடர்பாக...

immortal

இம்மோர்டல் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்

Published On :29 அக்டோபர் 2026, 6:14 pm IST

ஜிவி பிரகாஷ் குமாரின் இம்மோர்டல் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஏகே பிலிம் பேக்டரி தயாரிப்பில் சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்ட இம்மோர்டல் திரைப்படத்தை இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியிருந்தார்.

கதாநாயகனாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார், மகி எனும் கதாப்பாத்திரத்திலும், கயாது லோகர் சிந்து எனும் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்தில் லொள்ளுசபா மாறன், கார்த்திக், குமார் நடராஜன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம், கடந்த செப். 4 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

வாலிப மயக்கத்தில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்கிக் கொண்ட கதாநாயகன் அதிலிருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே இம்மார்டல் திரைப்படத்தின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இம்மோர்டல் திரைப்படம் இன்று (அக். 29) சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.

Summary

GV Prakash Kumar's film 'Immortal' has been released on an OTT platform and is garnering the attention of fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.