ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாக்கெட் நாவல் படத்துக்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

தியாகராஜன் குமாரராஜாவின் பாக்கெட் நாவல் படத்திற்கான இசையமைப்பாளர் குறித்து...

Pocket Novel Poster, GV Prakash

பாக்கெட் நாவல் போஸ்டர், ஜிவி பிரகாஷ் - படங்கள்: எக்ஸ் / டைலர்டர்டன், ஜிவி பிரகாஷ்

Published On :30 அக்டோபர் 2026, 5:55 pm IST

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள பாக்கெட் நாவல் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ஏற்கெனவே, சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தேசிய விருது பெற்ற இந்தக் கூட்டணியில் உருவாகியுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகர்கள் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் விரைவில் வெளியாகுமென தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இளையராஜா இசையில் உருவாக இருந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் பாக்கெட் நாவல் படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே, இணையத் தொடர் ஒன்றில் தியாகராஜா குமாரராஜாவின் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

GV Prakash to compose music for the film 'Pocket Novel'..! Official announcement!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.