பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் சிம்பு - நயன்தாரா?

நடிகர் சிம்பு மீண்டும் நடிகை நயன்தாரா உடன் இணைந்து நடிக்க இருப்பது பற்றி...

Nayanthara, Simbu

நயன்தாரா, சிம்பு - படங்கள்: இன்ஸ்டா / நயன்தாரா, சிம்பு

Published On :30 அக்டோபர் 2026, 3:06 pm IST

நடிகர் சிம்பு மீண்டும் நடிகை நயன்தாரா உடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் இருவரும் பத்து ஆண்டுகளுக்கு இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.

ட்யூட் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கீர்த்திஸ்வரன். இவரது இயக்கத்தில்தான் சிம்பு - நயன்தாரா இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபாவளியை முன்னிட்டு நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படம் வரும் நவ.6ஆம் தேதி வெளியாகிறது. சுந்தர் சி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு 60 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் அரசன் படமும் தீபாவளிக்கு வெளியாக இருந்தது. பின்னர், தள்ளிப் போகியுள்ளது. அரசன் உலகத்தில் இருந்து 7 நிமிஷ காட்சிகள் வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நயன்தாராவும் சிம்பும் இணைந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

கடைசியாக இவர்கள் இருவரும் பாண்டியராஜின் இது நம்ம ஆளு என்ற படத்தில் 2016ல் இணைந்து நடித்திருந்தார்கள். அதற்கும் முன்னதாக வல்லவன் எனும் படத்தில் 2006ல் நடித்திருந்தார்கள். தற்போது, டிசம்பரில் இதற்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நாயகனாக கீர்த்திஸ்வரன் இயக்கவிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியதும் பின்னர் வேறு ஒருவர் இயக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Summary

Silambarasan - Nayanthara to reunite after 10 years for Keerthiswaran film?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.