மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஸ் 10: இதுவரை எந்த சீசனிலும் வைக்காத போட்டி!

பிக் பாஸ் நிகழச்சியில் எந்தவொரு சீசனிலும் இடம்பெறாத புதிய போட்டி, இந்த வாரம் வைக்கப்பட்டுள்ளது குறித்து...

பிக் பாஸ் போட்டி - எக்ஸ்

Published On :27 அக்டோபர் 2026, 4:39 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் (8 வது வாரம்) புதுமையான போட்டி வைக்கப்பட்டுள்ளது. வாரம் முழுக்க நடைபெறும் இப்போட்டியில் வித்தியாசமான டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு வைத்து வெற்றியாளர்கள் நிர்ணயிக்கப்படவுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 8வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தின் முதல் நாளில் ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டது. இதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள 17 போட்டியாளர்களுமே நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

குயிக் கன் கெளவ்பாய்ஸ்

குயிக் கன் கெளவ்பாய்ஸ் - எக்ஸ்

இதற்கு மத்தியில் இந்த வாரத்துக்கான டாஸ்க்கை பிக் பாஸ் இன்று தொடங்கியுள்ளார். குயிக் கன் கெளவ்பாய்ஸ், மைனிங் மாஃபியாஸ் என்ற போட்டியை புதிதாக அறிமுகம் செய்துள்ளார். இதுவரை எந்தவொரு சீசனிலும் இந்த போட்டி வைக்கப்படவில்லை. பிக் பாஸ் சீசன் 10-ல் முதல்முறையாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பான முன்னோட்ட விடியோவும் வெளியாகியுள்ளதால், இதனால் நிகழ்ச்சியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மைனிங் மாஃபியாஸ்

மைனிங் மாஃபியாஸ் - எக்ஸ்

இப்போட்டியில், மைனிங் மாஃபியாஸ் அணி பிக் பாஸ் வீட்டில் வேலை செய்யும் உழைப்பாளிகள். இந்த வாரம் முழுக்க இடையிடையே போட்டிகள் வைக்கப்படும். இப்போட்டிகளில் கெளபாய்ஸ் அணி வெற்றி பெற்றால் கிச்சனை ரெய்டு செய்யலாம். மைனிங் மாஃபியாஸ் வெற்றி பெற்றால் கிச்சனை காப்பாற்றும் அதிகாரம் கிடைக்கும்.

பிக் பாஸ் வீட்டில் உணவு பெரிய பிரச்னையாகவே இருந்து வரும் நிலையில், இந்த வாரத்தில் வைக்கப்பட்டுள்ள போட்டியும் உணவை மையமாக வைத்தே வைக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்களிடையே ஏற்படும் பிரச்னைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இப்பிரச்னைகளை இரு அணிகளும் எவ்வாறு கையாள்கின்றன என்பதைப் பொறுத்து இந்த வார போட்டி அமையவுள்ளது.

Summary

Bigg boss tamil season 10 A competition unlike any seen in any previous season

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.